பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 பூர்ணசந்திரோதயம்-3 மற்ற விவரங்களை எப்போது சொல் வாய், நீ செய்துள்ள வாக்குறுதியை எப்போது முடிப்பாய் என்ற ஆவலே இப்போது என் மனசில் நிறைந்திருக்கிறது. ஆகையால், உன்னைக் காண்பதையும் நீ சொல்லும் இன்பகரமான சங்கதிகளைக் கேட்பதையும் தவிர அதிக சுவாரஸ்யமான விஷயம் வேறே இந்த உலகத்தில் இருக்கப் போகிறதா? ஒன்றும் இருக்கவே இருக்காது. வா, இப்படி வந்து லோபாவின் மேல் உட்கார்ந்து கொள்' என்று தேன் போல இனிப்பாகவும் அன்பாகவும் கூறி அவளை உபசரித்தார். நாம் இதுவரையில் பெயரைக் குறிக்காமல் விருந்தாளி ஸ்திரீயென்றே குறித்து வந்த பெண்பிள்ளைநமது சாமளராவின் சொந்தக் காரியும், மருங்காபுரி ஜெமீந்தார் தினசரி டைரியை எதிர்பார்த்திருந்த தினத்தன்று அவரிடம் வந்து மூவாயிரம் ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு போனவளுமான அம்மணி பாயி என்பது வெளியாவதால், இனி நாம் அவளை அம்மணி பாயி என்றே குறிப்போம். - ஜெமீந்தார் மிகுந்த ஆவலோடும் அன்போடும் அவளை உபசரித்து அழைக்க, அம்மணிபாயி அவரண்டையிலிருந்த ஒரு சோபாவினண்டையில் போய் வணக்கமாகவும் மரியாதையாக வும் அடங்கி ஒடுங்கி அவரை நோக்கி மகிழ்ச்சியாகப் புன்னகை செய்து, “ஏதேது! தாங்களும் இளவரசரிடத்தில் கொஞ்சம் பாடம் கற்றுக்கொண்டுவிட்டீர்கள் போலிருக்கிறது. அவர்தான் காரியம் ஆகவேண்டும் என்றால், இப்படியெல்லாம் தூக்கி வைத்து முகஸ்துதியாகப் பேசுவது வழக்கம்; அந்தக் காற்று இங்கேயும் கொஞ்சம் வீசிவிட்டதுபோலிருக்கிறது” என்று அதிமாதுரிய மாகவும் வேடிக்கையாகவும் மொழிந்தாள். அதைக்கேட்ட ஜெமீந்தார் குதூகலமாக நகைத்து, "என்ன அம்மணிபாயி! அப்படிச் சொல்லுகிறாய்? நான் அப்படி நயவஞ்சகமாக உன்னிடத்தில் எப்போதாவது பேசியதுண்டா?