பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 287 என்பது நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால், நானும் பெண்ணாகப் பிறந்து இதுவரையில் எத்தனையோ கோடானு கோடி இளம்பெண்களைப் பார்த்திருக்கிறேன். இந்தப் பெண்ணினுடைய கேவலம் கால் நகத்தழகுக்கு மற்றவர்களுடைய முகத்தழகு எல்லாம் ஈடு சொல்ல முடியாது. இந்தப் பட்டணத்திலுள்ள எல்லோரும் அந்தப் பூர்ணசந்தி ரோதயத்தைப் பார்த்துப் பிரமித்து அவளுக்கு மிஞ்சிய அழகு வாய்ந்த பெண்ணே இல்லையென்று தீர்மானித்து அவளை ஆகாய மட்டும் புகழுகிறார்கள். தாங்களும் ஒரு காலத்தில் அவளிடம் ஆசைப்பட்டதாகச்சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், இந்தப் பெண்ணைத் தாங்கள் மாத்திரம் பார்ப்பீர்களானால் தாங்கள் என்ன சொல்வீர்களோ தெரியவில்லை. இளவரசர் அந்தப் பூர்ணசந்திரோதயத்தைக் கண்டு மதிமயங்கி அவளைத் தம்முடைய குலதெய்வமாக வைத்துப் பூஜை பண்ணுகிறார்ே. அவர் மாத்திரம் இந்தக்கட்டழகியைப் பார்த்துவிடுவாரானால், உடனே அந்தப் பூர்ணசந்திரோதயத்தை ஒதுக்கிக் குப்பையில் தள்ளிவிடுவார். எப்பாடுபட்டாகிலும் இந்தப் பெண்ணை அவரே அடைந்துவிடுவார். அதன் பொருட்டு தம்முடைய ராஜ்ஜியம் போவதாக இருந்தால் கூட அவர் அதைப் பொருட்படுத்த மாட்டார் என்பது நிச்சயம். ஆகையால், அவருக்கு இந்த விஷயம் தெரியக்கூடாது என்பது என்னுடைய முக்கியமான கருத்து. ஆகவே, நான் அந்தப் பெண்ணை நிரம்பவும் பந்தோபஸ்தான ஒரிடத்தில் மறைத்து வைத்துவிட்டு அவசரமாகத் தங்களுக்குக் கடிதம் எழுதினேன் என்றாள். அதைக் கேட்ட ஜெமீந்தார் அப்போதே ஸ்ாயுஜ்ய ஸ்ாருப ஸ்ாமீப லோகங்களைக் கண் எதிரில் தரிசிப்பவர்போல ஆனந்த பரவசமடைந்தவரானார். தமது ஆயிசுகாலத்தில் தாம் அதுகாறும் கண்டுள்ள பெண்கள் எல்லோரிலும் பூர்ணசந்தி ரோதயமே சகலமான அம்சங்களிலும் நட்சத்திரச்சுடர் என்ற எண்ணமே அவரது மனதிலிருந்து வந்தது ஆகையால், அவள் 19.5.iii-19