பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 30 í உவகைபூத்த சிரித்த முகத்தினராய் அவர்களை நோக்கி விரைவாக நடந்து, 'வாருங்கள், வாருங்கள்' என்று கரைபுரண்டோடிய அன்போடு உருக்கமாக உபசரித்து வரவேற்க, அம்மணிபாயி, "வருகிறோம்" என்று அடக்கமாக மறுமொழி கூறியவண்ணம் பதிவிரதா ஸ்திரீபோல நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு முதலிய குணங்கள் ஜ்வலிக்க, அவரைக் கண்டு ஒடுக்கமாகவும், பணிவாகவும், மரியாதையாகவும் நடந்து கொள்ளுகிறாள் என்பது தோன்ற அன்னநடை நடந்து முன்னால் செல்லலானாள். அந்த வெல்வெட்டு மாடத்தின் அற்புதமான அமைப்பும் தேஜோமயமான அலங்காரங்களும் முன்னரே விரிவாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், அன்றையதினம் அந்த மாடம் மன்மதனது கலியாணமண்டபம் போலக் கோடிசூரியப் பிரகாசமாகக் காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் சரவிளக்குகளும், வால்ஷேட், லஸ்டர், குளோப் முதலிய அபூர்வமான கண்ணாடிவிளக்குகளும் கணக்கற்றுத் தோன்றின. அவைகள் பச்சை, சிவப்பு, வெள்ளை, நீலம், ஊதா, மஞ்சள் முதலிய பல வர்ணங்களுடையவை யாகவும், கமகமவென்று வாசனை கமழும் மெழுகுவர்த்திகள் நிறைந்தவையாகவும் இருந்தமையால், அவைகள் அபரி மிதமான ஜோதியும் நறுமணமும் அழகும் கொடுத்துக் கொண்டிருந்தன. பூத் தொட்டிகளில் குலுங்கிநின்ற ரோஜா, மல்லிகை, ஜாதி மல்லிகை, மனோரஞ்சிதம் முதலியவற்றின் அரும்புகள் அப்போதே தளையவிழ்ந்து நகைத்துப் பரிமளகந்தத்தை அந்த மாடம் முழுதும் மனோரம்மியமாக நிரப்பி இருந்தமையால், அதற்குள்நுழைந்த உடனே எத்தகைய புண்பெற்ற மனதும் ஆனந்த பரவசமடைந்து ஸுகவாரியில் ஆழ்ந்து மெய்மறந்து போகத்தக்கதாக இருந்தது. சுவர்கள், மேஜைகள், நாற்காலிகள், சோபாக்கள் முதலிய எல்லா இடங்களிலும் பச்சை, சிவப்பு, கருப்பு, மஞ்சள் முதலிய நிறங்களில் தகத்தகாயமான வெல்வெட்டு பொருத்தப் பட்டிருந்ததும், அவைகள் விளக்குகளின் ஜோதியில் பதினாயிர