பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 303 நன்றியறிதலும் உடைய தேகம் நெக்குவிட்டு இளகியது. முகம் சந்தோஷத்தினாலும் விசுவாசத்தினாலும் விரிந்து விகஸித்துத் தோன்றியது. ஆனாலும், அவள் தனது இயற்கை லட்சணங்களான நாணம், மடம், அச்சம் முதலியவற்றால் மேற்கொள்ளப்பட்டவளாய்த்தலைகுனிந்து, கட்டைவிரலைப் பார்த்தபடி அன்னப்பட்சிபோல நடந்து சென்றாள். மருங்காபுரி ஜெமீந்தார்.அம்மணியாயியை நோக்கி 'லக்ஷ-மி யம்மா குழந்தை ஷண்முகவடிவை அழைத்துக்கொண்டு போய் அதோ பக்கத்திலிருக்கும் அறையில் உட்கார வையுங்கள். என்னுடைய தங்கை கண்ணம்மாள் இப்போதுதான் கீழே போனாள். மாரியம்மன் கோவிலுக்குப் போனவர்கள் இன்னமும் திரும்பி வரவில்லை; என்ன காரணத்தினால் வரவில்லையோ தெரியவில்லை. யாரையாவது வேலைக் காரரை உடனே மாரியம்மன் கோவிலுக்கு அனுப்பி உண்மையைத் தெரிந்து கொண்டுவரும்படி செய்யலாம் என்று நான் யோசனை சொன்னேன். அதற்காகவே, கண்ணம்மாள் கீழே போனாள். நான் இதோ அவளைக் கூப்பிடுகிறேன். நீங்கள் போய் உட்கார்ந்துகொள்ளுங்கள். குழந்தாய் ஷண்முகவடிவு போஅம்மா போய் அந்தப் பக்கத்தில் உட்கார்ந்து கொள்' என்று மாதுரியமான குரலில் உருக்கமாகக் கூறி அவர்களை உபசரிக்க, அம்மணிபாயி ஷண்முகவடிவை அழைத்துக்கொண்டு அந்த வெல்வெட்டு மாடத்தின் கடைசியில் அறைபோல மறைவாக இருந்த பாகத்தை அடைந்து அவ்விடத்தில் போடப்பட்டிருந்த ஸோபாவின் மீது ஷண்முகவடிவை உட்காரச் செய்து தானும் உட்கார்ந்து கொண்டாள். தனது அக்காளை எப்போது காண்போம் என்று கட்டிலடங்கா ஆவலோடு வந்த ஷண்முக வடிவு, அவள் மாரியம்மன் கோவிலிலிருந்து இன்னமும் திரும்பி வரவில்லை என்பதைக் கேட்கவே, கவலை கொள்ளலானாள். அவளது மனதை நிறைத்துக் கொண்டிருந்த உற்சாகமும் பூரிப்பும் சடேரென்று மாறிச் சோர்வு எய்தின. 9.5, HI-20