பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 பூர்ணசந்திரோதயம்-3 32 - வது அதிகாரம் அற்ப சகவாசம் பிரான சங்கடம் லீலாவதி என்னும் பெண் தந்திரம் செய்து தனது புருஷனான மாசிலாமணிப்பிள்ளையைச் சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்த விவரம் முன் ஓர் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டதல்லவா? அவர் அவ்வாறு தன்னைத் தனிமையில் விடுத்துச் சென்ற பிறகு அந்த மடந்தை தங்களுக்குச் சொந்தமான சகலமான பொருட் களையும் எடுத்துக்கொண்டு பங்களாவைக் காலி செய்துவிட்டு வேலைக்காரர்கள் எல்லோரையும், அவரவர்களுக்குச் சேர வேண்டிய சம்பளங்களைக் கொடுத்தனுப்பிவிட்டு தனது பெரிய தகப்பனாரினதுமாளிகைக்கு வந்துசேர்ந்து கொலைக்குற்றத்தின் பொருட்டுத் தனது புருஷன் போலீசாரால் சிறைப்படுத்தப் பட்டுப் போன வரலாற்றையும் தான் அவருக்குச் செய்துள்ள வாக்குறுதியின் வரலாற்றையும் தனது பெரிய தந்தையிடம் வெளியிட்டாள். அவைகளையெல்லாம் கேட்ட மருங்காபுரி ஜெமீந்தார் பெரிதும் மகிழ்ச்சியடைந்தவராய், லீலாவதி செய்த தந்திரத்தைப் பற்றி அவளை நிரம் பவும் புகழ்ந்ததன்றி, மாசிலாமணிப் பிள்ளையைத் தப்பவைப்பதற்குத் தாம் எவ்வித முயற்சியும் செய்யாமல் சும்மா இருந்துவிடவேண்டும் என்றும், அப்படி இருந்துவிட்டால் அவர் தண்டிக்கப் பட்டுப் போவார் என்றும், அதன்பிறகு லீலாவதியினது துன்பங்கள் எல்லாம் நிவர்த்தியாகி விடும் என்றும் கூறினார். அதைக் கேட்ட லீலாவதி, 'ஆம். நீங்கள் சொல்லும் யோசனை நல்லதுதான். ஆனால், நாம் எவ்வித முயற்சியும் செய்யாமல் சிறையில் இருப்பவரைக் கவனிக்காமல் விட்டு விட்டோம் என்று ஜனங்கள் அவதூறு சொல்லுவார்கள். அதுவுமன்றி, தெய்வச்செயலாக அவரே ஒருவேளை விடுதலை அடைந்து திரும்பி வருவாரானால், நாம் சும்மா இருந்து விட்டோம் என்ற ஆத்திரம் அவருடைய மனசை விட்டு