பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 பூர்ணசந்திரோதயம்-3 கொண்டு ஒவ்வொருநாளும் சிறைச்சாலைக்குப் போய்த் தனது புருஷனைக் கண்டு உண்பித்து இடையிடையில் வாத்சல்யமும், துயரமும் காட்டி உருக்கமாகப் பேசி, தான் இளவரசரைக் கண்டதாகவும், நியாயாதிபதி விசாரணை செய்து தண்டனை விதிப்பாரானால், தாம் உடனே குறுக்கிட்டு அதை நிவர்த்தி செய்து வைப்பதாக இளவரசர் வாக்குக்கொடுத்திருப்பதாகவும் சொல்லி அவரை நிரம்பவும் தேற்றி, தாம் எப்படியும் தப்பி வெளிப்பட்டு விடுவோம் என்று அவர் நிச்சயமாக நம்பும்படி செய்து அவரோடு நெடுநேரம் இருந்து, அவரை விடுத்துப் பிரிய மனமற்றவள் போல நடலம் செய்து முடிவில் அவ்விடத்தை விட்டு மருங்காபுரி ஜெமீந்தாரினது மாளிகைக்கு வந்து விடுவாள். அவர் சிறைப்படுத்தப்பெற்ற பின் சுமார் இருபது தினங்களுக்குப் பிறகு அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அன்றையதினம் மருங்காபுரி ஜெமீந்தாரும் லீலாவதியும் கச்சேரிக்கு வந்திருந்து வக்கீலைஅமர்த்தி வாதாடச் செய்து, மாசிலாமணிப்பிள்ளையின் விஷயத்தில் மட்டற்ற அக்கறையும் கவலையும் தோன்றுவித்தவராய்ச் சுட்டிக் கொண்டிருந்தனர். அந்த வழக்கின் விசாரணை முடிவடைந்தது. மாசிலாமணிப் பிள்ளை கொலை குற்றம் செய்தது உண்மைதான் என்று சாட்சிகள் மூலமாய் நன்றாக வெளிப்பட்டது. ஆனாலும், அவர் குடித்து வெறி கொண்டிருந்த காலத்தில், திடீரென்று கோபமூட்டப்பட்டதனால், அவர் அடக்கமுடியா ஆத்திரம் கொண்டு மெய்மறந்து அந்தக் கொலையை நடத்தினார் என்பதும் வெளிப்பட்டது. ஆகையால், நியாயாதிபதி அவருக்கு மரண தண்டனை விதிக்காமல், ஏழு வருஷ கடின காவல் தண்டனை விதித்தார். மாசிலாமணிப் பிள்ளை மறுபடியும் சிறைச்சாலையை அடைந்தார். லீலாவதி திரும்பவும் அவரிடம் சென்று தான் இளவரசரிடம் போய், அவருக்கு விடுதலை பெற்று வருவதாக வாக்குறுதி செய்து கொடுத்து அவரைத் தேற்றிவிட்டு வந்து சேர்ந்தாள். அடுத்த நாள் அவள் மறுபடியும் மாசிலாமணிப் பிள்ளையிடம் போய்