பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 பூர்ணசந்திரோதயம்-3 இருவரும், அந்த விபரீத சம்பவத்தைப் பற்றி மட்டற்ற விசனமும் அவமானமும் அடைந்தவர்கள் போலக்காட்டிக் கொண்டனர். அவ்வாறு நாட்கள் கழிய, லீலாவதி தனது பெரிய தந்தையினது மாளிகைக்கு வந்ததிலிருந்து சுமார் ஒரு மாத காலம் கழிந்தது. மருங்காபுரி ஜெமீந்தார்.தமது இயற்கைப்படி குதூகல புருஷராகவும், ஸ்திரீலோலராகவும் இருந்து வந்தார். லீலாவதியும் தனது புருஷரைப்பற்றிய நினைவையே மறந்து சுயேச்சையாக உண்பதும் உறங்குவதுமாக இருந்து, தனது பெரிய தந்தையின் மனப்போக்கின்படி நடந்து அவருடையதுர் எண்ணங்களுக்கெல்லாம் முற்றிலும் அனுசரணையாக இருந்து வந்தாள். அந்த நிலைமையிலேதான் அம்மணிபாயி என்பவள் ஷண்முகவடிவை வஞ்சித்துக் கோலாப்பூரிலிருந்து தஞ்சைக்கு அழைத்துவந்து, அவளது அக்காளானகமலத்தினிடம் கொண்டு போய் விடுவதாகச் சொல்லி, மருங்காபுரி ஜெமீந்தாரிடம் கொணர்ந்துவிட்டுப் போய்விட்டாள். அது சம்பந்தமான விவரம் முற்றிலும் இதற்கு முந்திய அதிகாரத்தில் நன்கு விவரிக்கப் பெற்றிருக்கிறது. அந்த அதிகாரத்தின் முடிவில் கூறப்பட்டபடி அம்மணிபாயி மருங்காபுரி ஜெமீந்தாரிடம் செலவு பெற்றுக் கொண்டு போனபிறகு ஷண்முகவடிவு, தனது அக்காளான கமலத்தை உடனே காண இயலாமல் போனதைக் குறித்து நிரம்பவும் விசனமும் ஏமாற்றமும் அடைந்தாள். ஆனாலும், மருங்காபுரி ஜெமீந்தார் லீலாவதி ஆகிய இருவருக்கு முன்பும் அதைக் காட்டிக்கொள்ளாமல், அவர்களிடத்தில் நிரம்பவும் பயபக்தி விநயத்தோடு நடந்து கொண்டாள். அம்மணிபாயி சொன்ன கட்டுக்கதை முழுதையும் அவள் உண்மையென்றே நம்பினதன்றி, அதற்கிணங்க, மருங்காபுரி ஜெமீந்தாரும் லீலாவதியும் நடந்ததைக் கண்டமையால், அவள் எவ்வித சந்தேகமும் கொள்ளாமல், மருங்காபுரி ஜெமீந்தாரை சோம சுந்தரம் பிள்ளை என்றும் லீலாவதியை அவரது தங்கையான