பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32O r பூர்ணசந்திரோதயம்-3 அதைக்கேட்ட லீலாவதி அவளது துன்பத்தைப் பொருட் படுத்தாமல் அசட்டையாகப் பேசத் தொடங்கி, 'அப்படி உனக்கு அவ்வளவு பிரமாதமான துயரம் என்ன வந்து விட்டது. ஒன்றையும் காணோமே. உன்னுடைய பிரியத்துக்குக் கொஞ்சமும் அருகமற்றவனாக யாரோ ஒரு பையனைப் பற்றி நீ இனிமேலும் நினைத்து விசனப்படுவதில் என்ன உபயோகம்2 அவனுடைய யோக்கியதையை நீ உள்ளபடி தெரிந்து கொள்ளாமல் அவன்மேல் நீ ஆசை வைத்ததே முதலில் தப்பு. இப்போது அவன் தன்னுடைய குணம் இப்படிப்பட்டது என்பதைக் காட்டிவிட்டான். இதோடு அவனை நீ விட்டொழிக்க வேண்டுமே அன்றி, அதை நினைத்து நினைத்து நீ உன்னுடைய வாழ்நாளை எல்லாம் ஏன் விசனத்தில் ஆழ்த்திக் கொள்ளுகிறாய்? நன்றாக எண்ணிப் பார்த்தால், நடந்து போனதைப் பற்றி இனி நீ கொஞ்சமும் விசனப்படவே நியாயமில்லை' என்றாள். அந்த இரக்கமற்ற வார்த்தைகளைக் கேட்ட ஷண்முகவடிவு நிரம் பவும் பிரமித்து ஸ்தம் பித்து போனாள். முதல் நாள் இரவிலிருந்து தனது நிலைமையைப் பற்றி நிரம்பவும் அனுதாபமாகவும், இரக்கமாகவும் பேசிக்கொண்டு வந்த லீலாவதி திடீரென்று புதுமனுஷியாக மாறி, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற கொள்கையை எடுத்து உபதேசித்தது அவளால் நம்பக்கூடாத பெரும் புதுமையாக இருந்தது. ஷண்முகவடிவு பொறுமையே வடிவாகத் தோன்றி லீலாவதி யின்முகத்தை நோக்கி நிதானமாகப் பேசத் தொடங்கி, 'அம்மா! நீங்கள் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்வது என்னுடைய விதிவசம் என்றும் கால வித்தியாசமென்றும் நினைக்கிறேன். என்னுடைய மனசில் வேரூன்றியிருக்கும் துயரம் பிறருக்கு எளிதாகத் தோன்றினாலும் எனக்கு மாத்திரம் எளிதில் விலக்கக் கூடியதாகவும் அற்பமானதாகவும் தோன்றவில்லை. அப்படிப்பட்ட பெரிய விசனம் மனசை அழுத்திக்