பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 321 கொண்டிருக்கையில் சந்தோஷமாகப் பேசவும் குதூகலமாகப் பொழுதைப் போக்கவும் என்னால் ஆகவில்லை' என்றாள். உடனே லீலாவதி முன்னிலும் அதிக வாத்சல்யத்தோடு பேசத் தொடங்கி, "நீ சொல்வது எல்லாம் உண்மைதான். இந்தப் பையனை நினைத்து நீ இதுவரையில் விசனமுற்றது குற்றம் என்று நான் சொல்ல வரவில்லை. நான் இப்போது என்ன சொல்ல எண்ணியதென்றால், கெட்டுப் போனதைப் பற்றி இனி நாம் ஆயிரங்காலம் விசனப்பட்டாலும், அது இனி நல்லதாக மாறப்போகிறதில்லை. அந்தப் பையனைக் காட்டிலும் பதினாயிர மடங்கு சிரேஷ்டமான நற்குணங்களும், அழகும், செல்வமும், செல்வாக்கும் வாய்ந்த உத்தம புருஷர்கள் இந்த உலக்த்தில் எத்தனை மனிதரோ இருக்கிறார்கள். உனக்கும் அந்தப் பையனுக்கும் நெருக்கமான சம்பந்தம் எதுவும் ஏற்படவில்லை. அப்படியிருக்க, நீ அவனைப்பற்றிய நினைவை இவ்வளவோடு விட்டு உன்னுடைய மேம் பாட்டுக்குத் தகுந்தவரும், உண்மையான யோக்கியதாபட்சம் உள்ளவருமான வேறொரு புருஷரை நீ நாடவேண்டுமேயன்றி, நமக்குச் சொந்தம் இல்லையென்று நிச்சயப்பட்டுப் போனதை நீ மனசால் நினைப்பது கூட பெரும்பாவம் என்பது என்னுடைய எண்ணம்' என்றாள். ஷண்முகவடிவு, 'அம்மா! நீங்கள் இந்த மாதிரி பேசுவது நிரம்பவும் ஆச்சரியமாக இருக்கிறது. நேற்று நான் இங்கே வந்த முதல் இதுவரையில் நீங்கள் எவ்வளவோ அழகாகவும் புத்திசாலித்தனமாகவும் பேசினீர்கள். இப்போது நீங்கள் புது மாதிரியாகப் பேசுவதைக் கேட்க, எனக்குக் கொஞ்சமும் சகிக்கவில்லை. எனக்கும் அவருக்கும் கலியாணச் சடங்குகள் எதுவும் நிறைவேறவில்லை ஆனாலும், ஒரு சமயத்தில் அவர் என்னுடைய மான்த்தையும் உயிரையும் காப்பாற்றியதையும், அதுமுதல் நான் அவரையே என் புருஷராக மதித்து வந்ததை யும் நான் என் மனசுள்ள வரையில் மறக்க முடியுமா? அது