பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 பூர்ணசந்திரோதயம்-3 வேலைக்காரி, 'ஆண்பிள்ளைதான். நீங்கள் மாரியம்மன் கோவிலிலிருந்தபோது, உங்களுக்கும் உங்களுடைய புருஷருக்கும் அவர் பலவகையில் உதவி செய்தவராம். அவருடைய பெயரைக் கேட்டேன். அது அநாவசியம் என்று சொல்லிவிட்டார்” என்றாள். லீலாவதி முன்னிலும் அதிக வியப்பும் கலக்கமும் அடைந்து சிறிதுநேரம் சிந்தனையில் ஆழ்ந்தபின் வேலைக்காரியைப் பார்த்து, "சரி; நீ போய் அந்த மனிதரை நான் எப்போதும் உட்கார்ந்து படுத்துக்கொண்டிருக்கும் விடுதிக்கு அழைத்துக் கொண்டுபோய் அங்கேயே இருக்கச் சொல். இதோ நான் வருகிறேன்' என்றாள். உடனே வேலைக்காரி அவ்விடத்தைவிட்டு வெளிப்பட்டுக் கீழே இறங்கிப் போய்விட்டாள். லீலாவதி ஷண்முக வடிவை நோக்கி, 'அம்மா! நீ இவ்விடத்திலேயே இரு, நான் போய் இந்த மனிதரைப் பார்த்து அனுப்பிவிட்டுக் கால் நாழிகை சாவகாசத்தில் வந்து விடுகிறேன்' என்று கூறி அவளது அனுமதி பெற்று அவ் விடத்தை விட்டுக் கீழே இறங்கிப் போய் ப் பற்பல விடுதி களையும் மண்டபங்களையும் கடந்து, நடுமத்தியிலிருந்த தனது அந்தரங்க விடுதிக்குச் சென்றாள். தன்னைத் தேடிக்கொண்டு வந்திருக்கும் மனிதர் யாராயிருப்பார் என்று அவள் எவ்வளவோ யூகித்து யூகித்துப் பார்த்தது எல்லாம் பயன் அளிக்காமல் போயிற்று. அன்னிய மனிதர் தன்னிடம் சொல்லக்கூடிய அவசரமான சங்கதி என்ன இருக்கப் போகிறது என்ற கவலையும் கலக்கமும் தோன்றி, அவளது மனதை நிரம்பவும் சஞ்சலத்திலும் கலவரத்திலும் ஆழ்த்தி வதைத்துக் கொண்டிருந்தன. அவளது மேனி அடிக்கடி திடுக்கிட்டு நடுங்கியது. அந்த நிலைமையிலும் அவள் தனது அந்தரங்க விடுதிக்குள் நுழைந்து அவ்விடத்தில் ஆயத்தமாக நின்று கொண்டிருந்த மனிதர் யாரென்று உற்று நோக்கினாள். அதற்கு