பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 பூர்ணசந்திரோதயம்-3 எங்கே வந்தீர்? உமக்கு என்ன வேண்டும்?' என்று வினவினாள். அப்போது அவளது வாய் குழறியது. உச்சி முதல் உள்ளங்கால் வரையில் கிடுகிடென்று நடுங்கியது. அவள் விடுதிக்குள் போய் அங்கே கிடந்த ஒரு ஸோபாவின் மீது உட்கார்ந்து கொண்டாள். அவள் சொன்னதைக் கேட்ட கட்டாரித்தேவன் குறும்புத் தனமாகப் புன்னகை செய்த முகத்தினனாய் அவளை நோக்கி, 'ஏன் அம்மா! நான் யாரென்ற அடையாளம் தெரியவில்லையா? நான் உங்களுடைய பழைய மனிஷன் என்பது தெரிய வில்லையா? பழைய விசுவாசத்தை இதற்குள் மறந்து விட்டீர்களா? என்னைக் கண்டவுடனே ஏன் ஒரு மாதிரியாக முகத்தைச் சுளித்துக்கொண்டு கோபமாகப் பேசுகிறீர்கள்? நம் முடைய மனிதராயிற்றே என்ற பிரியத்தினால் நான் உங்களைக் கண்டு யோக rேமங்களை விசாரித்து விட்டுப் போகவந்தேன். அவ்வளவுதான் செய்தி. நான் உங்களிடத்தில் வேறே பெருத்த சன்மானம் எதையும் கேட்க வரவில்லை. நான் எப்போதும் உங்களைப் போன்ற பெரிய மனிதர்களுக்கு என்னாலான உதவியைச் செய்யக்கூடியவனே அன்றி எவ்விதமான தொந்தரவும் கொடுக்கக் கூடியவனேயல்ல. ஆகையால், நான் வந்ததைப் பற்றி நீங்கள் கொஞ்சமும் ஆயாசப்படத் தேவையில்லை' என்றான். அவனது சொற்கள் பயங்கரமாக இல்லாமல் சாவதானமாக இருந்தன. ஆகையால், லீலாவதியினது திகில் ஒருவாறு குறைந்தது. அவளது உடம்பின் படபடப்பும் தணிந்தது. அவள் மறுபடியும் நிதானமாகப் பேசத் தொடங்கி, ‘சரி; அப்படியா சங்கதி! என்னுடைய rேமத்தைப் பற்றி விசாரிக்கத்தானே வந்தீர்? வேறொருவிசேஷமும் இல்லையே! அப்படியிருக்க, நீர் என்னுடைய வேலைக்காரியினிடத்தில் சற்றுமுன் செய்தி சொல்லியனுப்பிய காலத்தில் என்னிடம் ஏதோ அவசரமான காரியம் இருக்கிறது என்று சொல்லி அனுப்பினரீராமே? அப்படி