பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 327 ஏன் சொல்ல வேண்டும்? எனக்கும் உமக்கும் என்னசம்பந்தம்? நீர் என்புருஷனுக்கு அறிமுகமான மனிதர் என்ற ஒர் ஆதாரத்தை வைத்துக்கொண்டு நீர் என்னோடு தனியாகப் பேச உத்தேசிப்பது ஒழுங்காகுமா? என்னோடு நீர் ஏதோ அவசரமான காரியத்தைப் பற்றிப் பேசுகிறீர் என்ற எண்ணம் இங்கேயுள்ள ஜனங்களின் மனிசல் படுமானால், அவர்கள் என்னைப்பற்றி எப்படிப்பட்ட எண்ணம் கொள்ள மாட்டார்கள்? இப்படி நீர் செய்தது கொஞ்சமும் தகுதியான காரியமல்ல. இந்தத் தடவை செய்ததுபோல நீர் இனி ஒருநாளும் செய்யமாட்டீர் என்று நினைக்கிறேன். எனக்கு அவசரமான வேறொரு காரியம் இருக்கிறது. நேரமாகிறது. நான் போகவேண்டும். நீர் என்னுடைய rேமத்தைப் பற்றி விசாரித்து விட்டுப்போக மாத்திரம் வந்திருக்கமாட்டீர் என்பது நிச்சயம் ஆகையால், நீர் என்ன கருத்தோடு இப்போது இங்கே வந்தீரோ அதைச் சீக்கிரமாகச் சொல்லும். அதிகமாக உம் மோடு பேச்சை வளர்த்திக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை என்று படபடப்பாகவும் அவசரப்படுத்தியும் பேசினாள். அதைக் கேட்ட கட்டாரித்தேவன் ரெளத்திராகாரமான கோபம் கொண்டான். அவனது கண்கள் கோவைப்பழங்கள் போலச் சிவந்தன. மீசைகள் படபடவென்று துடித்தன. இருந்தாலும் அவன் தனது வீராவேசத்தை அடக்கிக் கொண்டு நிரம்பவும் நிதானமாகவும் சாவதானமாகவும் பேசத்தொடங்கி, 'அம்மணி நான் இப்போது உங்கள் விஷயத்தில் எவ்விதமான பெரிய தவறும் செய்து விட்டதாகத் தோன்றவில்லை. நம்மிடத்தில் பலவிதமான உதவிகளைப் பெற்றுக்கொண்ட நமக்கு வேண்டிய மனிதர்களாயிற்றே என்ற நினைவினால் உங்களைப் பார்த்துவிட்டுப் போகவேண்டும் என்ற ஒருவித ஆசை உண்டாயிற்று. அதனால் வந்தேன். அப்படி நான் உங்களுடைய rேமத்தைப் பற்றி விசாரிக்கவும் உங்களைப் பார்க்கவும் வருவது என்னுடைய யோக்கியதைக்கு மிஞ்சிய