பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 37 ஒருவேளை பொய்யாக நடிக்கிறாளோ என்ற சந்தேகமும் சொற் பமாக எழுந்து எழுந்து மறைந்துபோயிற்று. மகா பரிதாபகரமான அவளது நிலைமையைக் காண, அவனது மனம் நிரம்பவும் இரக்கமும் உருக்கமும் அடைந்தது. ஆனாலும், அவைகளை வெளியில் காட்டினால், அவளது கருத்துக்குத் தான் இணங்கி விட்டதாக அவள் நினைத்துக்கொண்டு தன்னை மேன் மேலும் வற்புறுத்துவாளோ என்ற நினைவு இன்னொரு புறத்தில் எழுந்து, அவனது உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டே இருந்தது. கடைசியாக அவன் ஒருவாறு துணிவடைந்து அவளை நோக்கி அன்பாகவும் உறுதியாகவும் பேசத் தொடங்கி, 'தனம்! என்ன இது! நீ செய்யும் காரியம் கொஞ்சமும் சரியாக இல்லையே! நான்கு பக்கங்களில் ஜனங்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மை ஒருவேளை கவனித்தாலும் கவனிக்கலாம். நீ இவ்வளவு தூரம் மெய்மறந்து மதியீனமாக நடந்து கொள்வாய் என்று நான் கனவிலும் நினைக்கவே இல்லை. உன்னுடைய புத்திசாலித்தனம் என்ன! சமர்த்து என்ன! நீ நடந்து கொள்ளும் மாதிரியென்ன நீ செய்வதைக் காண என் உடம்பு குன்றிப் போகிறதே. போதும்; எழுந்திரு; நாம் உடனே புறப்பட்டு நம்முடைய ஜாகைக்குப் போவோம். நீ உன்னுடைய மனசை அடக்கிக்கொண்டு இந்த எண்ணங்களை யெல்லாம் மறந்துவிட வேண்டுமேயன்றி, இப் படி அநாவசியமாக உன் மனசையும் உடம்பையும் அலட்டிக்கொள்வதில் உபயோகமே இல்லை. கிட்டாதாயின் வெட்டென மற என்ற வாக்கியத்தை நீ கடைப்பிடித்தால், நீ நிரம்பவும் சுகம் அடைவாய்; நான் உங்களோடு இருப்பதனால் இப்படிப்பட்ட அநர்த்தங்கள் எல்லாம் நேருகின்றன என்று நீ சொல்வதால், நான் இன்றைக்கே புறப்பட்டு உங்களுடைய கண்ணில் படாதபடி வேறே இடத்துக்குப் போய்விடுகிறேன். அதன்பிறகு உன்னுடைய சங்கடமெல்லாம் படிப்படியாகச் சில தினங்களில் குறைந்து மறைந்து போவது நிச்சயம் என்றான். -