பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 49 அதைக்கேட்ட கலியாணசுந்தரம் சகிக்கமாட்டாத கோபமும் வியப் பும் அடைந்து, காலத்தில் என்னுடைய விடுதியின் பூட்டைத் திறந்து கொண்டு 'என்ன ஆச்சரியம்! நான் இல்லாத உள்ளே நுழைந்து என்னுடைய தஸ்தாவேஜூகளை நீர் எடுத்தீரா? அப்படி எடுக்க உமக்கு அதிகாரம் யார் கொடுத்தது?” என்றான். - அந்தப் போலீஸ் அதிகாரி சிறிதும் தயங்காமல், 'ஐயா! கோபித்துக் கொள்ளவேண்டாம்! நான்சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பவன். சட்டத்தையும் உத்தரவுகளையும் படித்தவன். ஆகையால், சரியான அதிகாரமில்லாமல் நான் அந்தக் காரியத்தைச் செய்திருக்க மாட்டேன் என்பதை நீங்கள் நிச்சயமாக நம்பலாம். போலீஸ் கமிஷனர் எனக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தே அனுப்பினார். வேண்டுமானால் காட்டுகிறேன். என்னுடைய சிப்பந்திகளான ஜவான்கள் சிலர் எனக்கு உதவியாக வந்து அதோ பக்கத்து வீட்டுத் திண்ணையில் இருக்கிறார்கள். அவர்களிடத்தில் அந்த உத்தரவு இருக்கிறது. நீங்கள் என்னோடு வந்தால், அதை நான் காட்டுகிறேன். அல்லது, அதைக் காட்டினால்தான் வருவேன் என்று நீங்கள் சொன்னால், அவர்களை இவ் விடத்துக்கே வரவழைத்து அதை வாங்கிக் காட்டுகிறேன்' என்றான். கலியாணசுந்தரம் முற்றிலும் குழம்பிப்போய், சிறிது நேரம் சிந்தனை செய்தான். தன்னிட்ம் ஏதோ விஷயங்களைச் சாதாரணமாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தோடு போலீஸ் கமிஷனர் அவர்களை அனுப்பி யிருந்தால், அவர்கள் தனது தஸ்தாவேஜுகளை பலவந்தமாக அபகரிக்க மாட்டார்கள். ஆதலால், தன்மீது ஏதோ தாவா இருக்கிறது என்பதை அவன் உடனே நிச்சயப் படுத்திக் கொண்டான். தான் பிறந்த முதல் அதுகாலம் வரையில் எவ்விதக் குற்றத்தையும் செய்யவில்லை என்பதை உறுதியாக உணர்ந்தவன். ஆதலால், தன்மீது யார் எப்படிப்பட்ட