பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் -- 67 தனது ஏற்பாட்டை விரிவாக வெளிப்படுத்து வாள் என்ற நம்பிக்கை உண்டாயிற்று. ஆகையால், அன்றைய இரவு வரையில் பொறுமையோடு இருக்கத் தீர்மானித்துக் கொண்டவனாய் ப் பொழுதை போக்கினான். சிறைச் சாலையில் அடைபட்டு இருப்பவருக்குப் பொழுதுபோவது நரகவேதனையாக இருப்பது இயற்கையல்லவா; அன்றைய தினம் கலியாணசுந்தரத்திற்குப் பொழுது போனது மற்ற தினங்களைவிட நூறுமடங்கு அதிக வேதனையாக இருந்தது. அன்றைய இரவு வராது என்றே அவன்பல தடவைகளில் சந்தேகப்படும்படி அன்றைய பகற்பொழுது நீண்டு கொண்டே போவதாகத் தோன்றியது. பகலிலும் சாயுங்காலத்திலும் வழக்கப்படி ஜவான் அவனுக்கு ஆகாரம் கொணர்ந்து வைத்த காலத்தில் கலியாணசுந்தரம் தனது மனவேதனையை வெளியிடாமல், ஏதோ புஸ்தகத்தை வைத்து சுவாரஸ்யமாகப் படிப்பவன் போல நடித்துக் கொண்டிருக்க ஜவான் சிறிதும் சந்தேகப்படாமல், தனது கடமைகளைச் செய்து முடித்துவிட்டுக் கதவை மூடிப் பூட்டிக்கொண்டு வெளியில் போய்விட்டான். எட்டுமணிக்கே தனது இராப்போஜனத்தை முடித்துக் கொண்ட கலியாணசுந்தரம் தனது விளக்கை அணையாமல் வைத்துக்கொண்டு, ஏதோ ஒரு புஸ்தகத்தைப் படித்துக் கொண்டிருக்க எத்தனித்தான். அவனது மனம் புஸ்தகத்திலிருந்த விஷயங்களில் செல்லவில்லை. ஆகையால், அவன் புஸ்தகத்தை வைத்துவிட்டு, எழுந்து அந்த அறைக்குள் அங்கும் இங்கும் உலாவத் தொடங்கினான். அவ்வாறு சிறிது நேரம் உலாவியபின் மறுபடியும் விளக்கண்டை போய், அன்றைய காலையில் வந்த புதுமையான கடிதத்தை எடுத்து நூறாவது தடவை படித்துப் பார்த்தான். கடிகாரம் பதினொரு மணி அடித்தது. முதல்நாள் இரவில் உண்டானதுபோல அப்போதும் ஓசை உண்டாவதாகத் தோன்றியது. அவன் உடனே தனது விசிப்பலகையின் மீது