பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பூர்ணசந்திரோதயம்-3 திரும்பிவந்து, "சரி; இரண்டு கம்பிகளை நாம் அறுத்தெடுத்து விட்டால், நமக்குப் போதுமான வழி உண்டாகிவிடும். அதற்குச் சுமார் மூன்றுமணி சாவகாசம் பிடிக்குமென்று நினைக்கிறேன். அதன்பிறகு நாம் வெளியில் உள்ள இடைஞ்சல்களை எல்லாம் விலக்கிக்கொண்டு வெளியில் போனால், அநேகமாகப் பொழுது விடிந்துபோகும். ஆகையால், நான் உடனே வேலை செய்ய்த் துவக்குகிறேன்: என்றான். அதைக் கேட்ட இந்திராபாயி, சரி; செய்யுங்கள். நான் விளக்கைப் பிடித்துக் கொள்ளுகிறேன். நீங்கள் கம்பியை அறுங்கள்' என்றாள். அவர்கள் அவ்வாறு சம்பாஷித் திருந்த சமயத்தில் முன்பக்கத்தில் இருந்த தாழ் வாரத்திற்கு அப்பால் இருந்த முற்றத்தின் அடியில் நின்றபடி ஒரு பாராக்காரன் கம்மலான தடித்த குரலில் பேசத் தொடங்கி, அடே யாரப் ஆா அது? ஏன் ஜன்னலைத் திறந்து வைத்திருக்கிறாய்? கதவை மூடி விட்டு விளக்கை அணை. பன்னிரண்டு மணிக்குமேல் விளக்க எரியக் கூடாது என்ற உத்தரவு உனக்குத் தெரியாதா?” என்று பயங்கரமாக அதட்டிய சத்தம் உண்டாயிற்று. உடனே படிகளின் வழியாக யாரோ தடதடவென்று மேலே ஏறிவந்த ஒசையும் உண்டாயிற்று. அதைக்கேட்ட இந்திராபாயி திடுக்கிட்டு நடுநடுங்கித் தனது கைகளைப் பிசைந்துகொண்டு, "ஐயையோ காரியம் கெட்டுப்போய் விடும் போல் இருக்கிறதே! பாராக்காரன் மேலே ஏறி வருகிறானே! இந்தக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தால் நாம் இருவரும் அகப்பட்டுக் கொள்வோமே! என்ன செய்கிறது? எப்படியாவது நீங்கள் அவனிடம் பேச்சுக் கொடுத்து அவனை அனுப்பி விடுங்கள். நான்விசிப்பலகையில் ஒளிந்து கொள்ளுகிறேன்" என்றாள்.