பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 79 உடனே அந்த மடந்தை, 'சரி; இனி நான் இங்கே இருப்பது ஒழுங்கல்ல; என்னுடைய அறைக்குப் போய் விடுகிறேன். ஆனால், நீங்கள் என் உடம்பைப் பிடித்து இந்தத் துவாரத்தின் வழியாக அப்பால் தள்ளிவிட வேண்டும் ' என்று கூறிய வண்ணம் எழுந்து பக்கத்தில் இருந்த துளையண்டை போய் நின்று தனது வலுவை எல்லாம் உபயோகித்து உடம்பை ஒடுக்கிக் கொண்டு துவாரத்தில் நுழைவதற்கு இரண்டு மூன்று தரம் பிரயத்தனப்பட்டாள். உடம்பு அவளது பிரியப்படி துவாரத்தில் போகாமல் அங்கும் இங்கும் நழுவி ஓடியது. அவளது கைகால்களெல்லாம் நடுங்க ஆரம்பித்தன. அவள் உடனே திரும்பி நின்று, 'ஏது! நான் இதற்குள் நுழைந்து அப்புறத்துக்குப் போகமுடியாது போலிருக்கிறது. அந்த அறையில் இருந்து நீங்கள், என்னை இந்த அறைக்குள் வலுவாக இழுத்ததை மறந்துவிட்டீர்களா அதுபோல இப்போதும் யாராவது என்னுடைய அறையிலிருந்து என்னை இழுத்தால் அல்லது நான் அங்கே போவது சாத்தியமில்லாத காரியமாகத் தோன்றுகிறது. இந்தச் சங்கடத்துக்கு நான் என்ன செய்வேன்!" என்று நிரம் பவும் தத்தளித்துக் கூறித் தனது கையைப் பிசைந்துகொண்டாள். அதைக்கண்ட கலியான சுந்தரமும் அளவற்ற கலவரமடைந்து, 'எப்படியாவது, பொழுது விடிவதற்குள் நீ அந்த அறைக்குப் போய்ச் சேரா விட்டால் நாளையதினம் ஜவான் இங்கே வந்து எல்லா வற்றையும் கண்டுகொள்வானே! அதன்பிறகு கமிஷனர் நம்மை எப்படிப்பட்ட தண்டனைக்கு ஆளாக்குவாரோ என்னவோ இந்தத் தர்மசங்கடத்திலிருந்து நாம் எப்படித் தப்புகிறதென்பது தெரியவில்லையே!' என்று கரைகடந்த சஞ்சலத்தோடு கூறினான். உடனே அந்த மடந்தை, "ஐயோ! எனக்கு மறுபடியும் மயக்கம் வருகிறதே! நான் என்ன செய்வேன்! கீழே விழுந்து விடுவேன்போல் இருக்கிறதே! சீக்கிரமாக இப்படி வந்து என்னைப் பிடித்து விசிப் பலகையின் மேல் படுக்க வையுங்கள்; சீக்கிரம் வாருங்கள் என்று go.g.iii-6