பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 83 அப்போதைய நிலைமையும் தோற்றமும் உள்ளபடி எடுத்துக் கூற முற்றிலும் அசாத்தியமானதாக இருந்தன. பெருத்ததிகிலும், வெட்கமும் எழுந்து அவளது உடம்பைக் குன்றச் செய்தன. அவளது மனம் பட்டபாட்டை, நரக வேதனைக்கே ஒப்பிட வேண்டும் அன்றி வேறல்ல. அவளது அழகிய மெல்லிய சரீரம் வெடவெடவென்று நடுங்குகிறது. அவள் தனது சேலைத் தலைப்பால் தனது முகத்தை மூடிக்கொண்டு மனம் நொந்து இரத்தக் கண்ணிர் விடுத்து விம்மி விம்மி அழுதவளாய், அவரது பாதத்தடியில் வீழ்ந்து அனலிடு புழுவெனத் தவித்து உருகுகிறாள். உலையில் கொதிக்கும் தண்ணீரைக் காட்டிலும் அதிகச் சூடு பொருந்திய கண்ணிர் அவளது அழகிய கன்னங்களைத் தீய்த்த வண்ணம் கீழே வழிந்து அவளது ஆடைகளையும், அவள் இருந்த தரையையும் நனைத்து ஜெமீந்தாரினது கால்களையும் சுட்டது. மகா அற்புத வனப்பு வாய்ந்த அந்தப்பெண் பாவையினது அங்கம் முழுதும் சிறிது நேரத்தில் உருகித் தண்ணிராக மாறி முற்றிலும் மறைந்து போய் விடுமோ என அஞ்சத்தக்க மகா பரிதாபகரமான நிலைமையில் அந்த அணங்கு ஆகுலித்துக் கிடந்தாள். அவ்வாறு அவர்கள் இருவரும் தேற்றுவார் இன்றியும் தேற்ற வொண்ணா விசன நிலைமையில் ஆழ்ந்தும் சிறிது நேரம் தத்தளித்திருக்க, அவர்களது சஞ்சலமும் சங்கடமும் ஒரு சிறிது தணிவடைந்தன. அளவற்ற விசனமும், அவமானமும் தோற்றுவித்த பார்வையாக அவர்கள் இருவரும் ஒருவரை யொருவர் பார்த்தனர். உடனே கிழவர் தாங்கள் இருந்த இடம் இன்னது என்பதை அப்போது நினைத்துக் கொண்டவர்போலச் சடேரென்று எழுந்துநின்று, "லீலாவதி இந்த இடம் இனி நாம் இருப்பதற்குத் தகுந்ததே அல்ல. ஒரு வண்டி கொண்டுவரச் செய்கிறேன். நாம் இருவரும் நம்முடைய ஜாகைக்குப் போவோம். நீ உன்னுடைய கண்ணைத் துடைத்துக்கொள். நமக்குள் ஏதோ விபரீத சங்கதி நடந்திருக்கிறதென்று ஹேமா