பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 105 கதவை மூடி உட்புறத்தில் தாளிட்டுக்கொண்டு உள்ளே வந்து அவனுக்குரிய பணிவிடைகளை எல்லாம் செய்யதி தொடங்கினாள். அதற்கு முன் ஒவ்வொரு நாளும் அவள் அவனது படுக்கையைத் தட்டி, மடித்து வைத்து வந்தாள். ஆகையால், அன்றைய தினமும் அவள் அதுபோலவே தனது கடமையைச் செய்ய நினைத்து, அவனது படுக்கையண்டை சென்று தலையணையை எடுக்க, அதன் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த கடிதம் அவளது திருஷ்டியில் பட்டது. முதல் நாள் அவ்வாறு கடிதத்தை மறைத்து வைத்த காலியாணசுந்தரம் தனது கலவரத்திலும் துயரத்திலும் அதை அடியோடு மறந்துவிட்டான் ஆகையால், அந்தத் தாதி தலையணையை எடுத்தபோது, கீழே இருந்த கடிதம் அவளது திருஷ்டியில் பட்ட காலத்திலேதான் அதைப்பற்றிய ஞாபகம் அவனுக்கு உண்டாயிற்று. உடனே அவன் பெருத்த திகிலும் விசனமும் அடைந்தவனாய், அந்தத் தாதி தான் கடிதத்தைக் கண்ட விவரத்தை எப்படியும் போலீஸ் கமிஷனரிடம் சொல்லிவிடுவாள் என்று நிச்சயித்துக் கொண்டான். ஆனாலும், அவன் சடேரென்று எழுந்து படுக்கையண்டைப் போய், ‘இரம்மா படுக்கையில் ஒரு சாமான் இருக்கிறது. அதை நான் எடுத்துக் கொள்ளுகிறேன்’ என்று கூறித் தலையணையின் கீழே கிடந்த கடிதத்தைத் தனது கையில் எடுத்துக் கொண்டான்.

அவன் படுக்கையண்டை நெருங்கி வந்ததைக் கண்ட அந்தத் தாதி மரியாதையாகச் சிறிது அப்பால் நகர்ந்து நின்று கொண்டாள். அதுகாறும் அவனிடத்தில் வாயைத் திறந்து ஒரு வார்த்தை யாகிலும் அவள் பேசாமலிருந்தாள். ஆனாலும் அவளது முகம் எவ்வித மாறுபாட்டையும் தோற்றுவிக்காமல் ஒரே விதமாக இருந்து வந்தது. ஆனாலும், அந்தக் கடிதத்தைக் கண்டபிறகு அவளது தோற்றம் மாறுபட்டுத் தோன்றியது. முகத்தில் களை தோன்றியது. அவள் அவனது அந்தரங்க விஷயங்களை எல்லாம் அறிந்தவள் போலவும் அவனிடம் பேச