பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 7 தேவன் தங்களது மாளிகைக்குள் வந்ததைக் கவனித்திருந்து, அவனைப் பிடிப்பதற்காகத் தொடர்ந்து வந்திருப்பாரோ என்ற சந்தேகம் உண்டாயிற்று. அப்படியிருந்தாலும், இல்லா விட்டாலும் தன்னை மிரட்டிய அந்த முரட்டுத் திருடனைப் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் காட்டிக்கொடுத்து விடலாமா என்ற எண்ணமும் தோன்றியது. ஆனாலும், தான் அப்படிச் செய்வதனால் தனக்குக் கெடுதல் உண்டாகும் என்ற யோசனையும் தோன்றியது. எப்படியென்றால், தான் அவனைக் காட்டிக் கொடுத்தால் அவன் உடனே தங்களது ரகசியங்களை எல்லாம் வெளியிட்டு விடுவான் என்றும், அதனால் தனக்குப் பெருத்த தீங்கும் அவமானமும் நேரும் என்றும் அவள் எண்ணினவளாய் அங்கே வந்த வேலைக் காரியைப் பார்த்து, ‘அடி! நீ போய் இன்ஸ்பெக்டரை உள்ளே அழைத்துக் கொண்டுவந்து கூடத்தில் போடப்பட்டிக்கும் நாற்காலியின்மேல் உட்கார வை. நான் இதோ வந்து அவரைப் பார்க்கிறேன்’ என்று கூறி வேலைக்காரியை அனுப்பிவிட்டு தனக்கு எதிரில் நடு நடுங்கி நின்ற கட்டாரித்தேவனைப் பார்த்து, ‘ஐயா! எங்களுடைய ரகசியங்களை எல்லாம் வெளியிட்டு எனக்குத் தீங்கு செய்வதாகச் சொன்னரே. அப்படிச் செய்ய நினைக்கும் உம்மை இப்போது நான் இந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒப்புவித்து விடுவது நியாயமல்லவா. அப்படியிருந்தாலும், நீர் எங்களுக்குப் பலவகையில் உதவி செய்தவர் என்பதைக் கருதி நான் அப்படிச் செய்ய நினைக்கவில்லை. போலீஸ் இன்ஸ் பெக்டர் நீர் இங்கே வந்ததைக் கவனித்து உம்மைப் பிடித்துக் கொள்ளும் பொருட்டு தொடர்ந்து வந்திருப்பார் என்று நினைக்கிறேன். அவரோடு இன்னும் பல ஜெவான்களும் வந்திருக்கலாம். நான் உடனே போய் அவரைப் பார்க்கிறேன். அவர் உம்மைப் பிடித்துக்கொண்டு போக வந்திருப்பதாகச் சொன்னால், நீர் வரவே இல்லையென்று நான் உறுதியாகச் சொல்லி அவரை அனுப்பிவிடுகிறேன். நான் சொல்வதை அவர் ஒப்புக்