பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 iC பூர்ணசந்திரோதயம்-4 வருகையை எதிர்பார்த்தவர்களாய்க் காத்திருந்தனர். நான் அவர்களுடன் பேச்சுக் கொடுத்து அவர்களுடைய வரலாற்றைக் கேட்டேன். தாங்கள் தஞ்சாவூரிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னதோடு, இந்தச் சிறைச்சாலையில் கலியான சுந்தரமென்ற ஒருவர் யாதொரு குற்றமும் இன்றி அநியாயமாக அடைபட்டிருப்பதாகவும், அவருடன் தாங்கள் கடிதப் போக்குவரத்து செய்ய ஆசைப்படுவதாகவும் கூறி, நான் அதற்கு அனுகூலமாக இருக்க வேண்டுமென்று நிரம்பவும் கெஞ்சி மன்றாடிக் கேட்டுக் கொண்டதன்றி, ஒரு பெருத்த பணப்பையையும் வற்புறுத்தி எனக்குச் சன்மானமாக அளித்தனர். நான் அந்தப் பணத்துக்காகச் செய்யாவிட்டாலும் அவர்கள் என்னை ஒரு பொருட்டாக மதித்து அவ்வளவு தூரம் கேட்டுக் கொண்டதைக் கருதி நான் அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கினேன். முதலில் கலியாணசுந்தரம் என்பது யார் என்பதே எனக்குத் தெரியவில்லை. நான் வந்து விசாரித் ததில் அது உங்களுடைய பெயர் எனத் தெரிந்துகொண்டு, அவர்கள் கொடுத்த முதல் கடிதத்தைக் கொணர்ந்து ஜன்னலுக்குள் போட்டேன். அவ்வளவுதான் விவரம்’ என்றாள்.

அவள் சொன்ன விவரங்களைக் கேட்ட கலியாணசுந்தரம் நிரம் பவும் வியப்பும் சந்தேகமும் கொண்டு சிறிதுநேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். அவள் சொன்னது உண்மையான விஷயமாக இருக்குமா, அல்லது, தனது பகைவரினது தூண்டுதலின்மேல் கட்டுப்பாடாகச் சொல்லப்பட்ட விஷயமாக இருக்குமா என்ற பெருத்த சந்தேகம் பிறந்தது. அவன் அந்தத் தாதியை நோக்கி, “ஏனம்மா! உன்னிடம் கடிதம் கொடுத்து அனுப்பிய மனிதர்கள் தங்களுடைய வரலாறுகளையும் அவர்கள் என்னை விடுவிக்க முயற்சிக்க வேண்டிய காரணம் என்ன என்பதையும் உன்னிடம் வெளியிட்டார்களா என்றான்.