பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 117 மணிக்கு இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு பைத்தியக்காரி களின் வைத்தியசாலைக்குப் போக நீர் ஆயத்தமாக இருக்க வேண்டியதே முடிவான காரியம். நாங்கள் பொய்யாக உம்மைப் பயமுறுத்துகிறோம் என்று நினைத்து நீர் இதை அசட்டை செய்ய மாட்டீர் என்று நினைக்கிறேன். உம்முடைய முடிவான எண்ணம் என்ன என்பதை நீர் இந்தக் கடிதத்தின் பின்பக்கத்தி லுள்ள காலி இடத்தில் எழுதி இதையே திருப்பி அனுப்பவும்.

போலீஸ் கமிஷனர்.

- என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைக் கலியாணசுந்தரம் இரண்டுதரம் படித்து முடித்தான். அவனது மனதில் உண்டாகி யிருந்த பலவிதக் கவலைகளில் பெரும் பாகமும் குறைந்தது. தாதி தனக்குக் கொணர்ந்த கடிதத்தின் விஷயமும், தான் எழுதி அவளிடம் கொடுத்த கடிதத்தின் விஷயமும் ஒருகால் போலீஸ் கமிஷனருக்குத் தெரிந்திருக்குமோ என்று தான் கொண்ட கவலை வீண் கவலையென்று அவன் உடனே நிச்சயித்துக் கொண்டவனாய், தனக்கு எதிரில் நின்ற பாராக்காரனைப் பார்த்து, “நான் இந்தக் கடிதத்திலேயே பதில் எழுதி அனுப்ப வேண்டும் என்று கமிஷனர் எழுதி இருக்கிறார். ஆனால், பென்சில் முதலியது எதுவும் இல்லை. உன்னிடம் இருந்தால், கொடு; நான் உடனே எழுதித் தருகிறேன்’ என்றான். பாராக்காரன் தான் அதற்காகவே ஒரு பென்சில் கொண்டு வந்திருப்பதாகக் கூறித் தனது சட்டைப்பையிலிருந்து ஒரு பென்சிலை எடுத்துக் கொடுக்க, அதைக் கலியாணசுந்தரம் வாங்கி கடிதத்தின் பின்புறத்தில் அடியில் வருமாறு உத்தரம் எழுதத் தொடங்கினாள்- -

ஐயா! உங்களுடைய இந்தக் கடிதத்தை நான் நன்றாகப் படித்துப் பார்த்தேன். நீங்கள் முன்னர் என்னிடம் நேரில் பிரஸ்தாபித்த விஷயங்களைத் தவிர புதிதான விஷயம் எதுவும் இதில் காணப்படவில்லை. ஆகையால், நான் முன்னே சொன்ன