பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் j 23 உண்டாயிற்று. சிறைச்சாலைக்குள் நடந்த முக்கியமான விஷயங்களை எல்லாம் தான் விரிவாக எழுதியிருக்கும் அந்தக் கடிதத்தை அந்தத்தாதி போலீஸ் கமிஷனரிடம் காட்டிவிட்டால், அதிலிருந்து தனக்கு முன்னிலும் அதிகமான கெடுதல் ஏதேனும் சம்பவிக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. அவள் தன்னிடமிருந்து எடுத்துப் போகும் கடிதங்களையும் வெளியி லிருந்து எடுத்து வரும் கடிதங்களையும் போலீஸ் கமிஷனர் பார்த்திருந்தும் அவ்விடத்தில் மேலும் என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்ப்பதற்காக, ஒன்றையும் அறியாதவர்போல அவைகளை அனுப்பிக்கொண்டு வருகிறாரோ என்ற ஐயமும் தோன்றியது. தனக்கு அவர் தம்மால் இயன்ற அளவு எவ்வளவு அபாரமான கொடுமை செய்யக்கூடுமோ அதைச் செய்ய உத்தேசித்திருக்கிறார் என்பது நன்றாக விளங்கியது. ஆகையால், அவர் அந்தக் கடிதங்களைப் பார்ப்பதும் ஒன்றுதான், பார்க்காது இருப்பதும் ஒன்றுதான் என்ற எண்ணமும் உண்டாயிற்று. ஆகையால், அவன் தனது மனதை ஒருவாறு திடப்படுத்திக் கொண்டு அன்றையதினம் இரவைக் கழித்தான்.

மறுநாள் காலையில் வழக்கப்படி தாதி அவ்விடத்திற்கு வந்து, இன்னொரு புதிய கடிதத்தை அவனிடம் கொடுத்தாள். அவள் எவ்விதமான மறுமொழி கொண்டு வருவாள் என்று அவளது வருகையை நிரம்பவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த கலியாணசுந்தரம் அவள் கொடுத்த கடிதத்தை வாங்கிப் பிரித்துப் படிக்க அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது

ஐயா, நீங்கள் அனுப்பிய கடிதம் வந்தது. அதில் எழுதப்பட்டிருக்கும் புதிய விவரங்களை எல்லாம் தெரிந்து கொண்டோம். நாங்கள் எவ்விதமான தந்திரம் செய்யப் போகிறோம் என்பதை இப்போது வெளியிடுவது உசிதமல்ல என்று நினைக்கிறோம். உங்களை எப்படியும் விடுவித்தே தீரவேண்டுமென்று நாங்கள் கங்கணம் கட்டிக் கொண்டி ருக்கிறோம். ஆகையால், நாங்கள் அசட்டையாகவர்வது.