பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பூர்ணசந்திரோதயம்-4 செய்துவிட்டு அந்தப் பெண்ணை ஏற்றுக்கொண்டு இந்த ஊரிலேயே இருக்க ஒப்புக் கொள்ளுகிறீரா இல்லையா? என்ன

சொல்லுகிறீர்?” என்றார்.

கலியாணசுந்தரம், “நீங்கள் ஏற்கெனவே நேரில் கேட்ட போதும், கடிதம் எழுதியபோதும், நான் எவ்விதமான மறுமொழி சொன்னேனோ அதே மறுமொழியைத்தான் இப்போதும் சொல்லப்போகிறேன். நீங்கள் என்னை அந்தப் பைத்தியக்காரிகளிடையில் கொண்டுபோய்விட்டபிறகு மறுபடி இன்னொரு தரம் நீங்கள் வந்து கேட்டால்கூட அப்போதும் நான் அதே மறுமொழியைத்தான் சொல்லுவேன். ஆகையால், நீங்கள் என்னை மேன்மேலும் கேட்க வேண்டுமென்று வீண் பிரயாசை எடுத்துக்கொண்டு உங்களுடைய அருமையான பொழுதை அநாவசியமாகச் செலவு செய்யவே வேண்டிய தில்லை. ஆகையால், உங்களுடைய முடிவான தீர்மானத்தை நீங்கள் நிறைவேற்றலாம்’ என்று அழுத்தமாகவும் முடிவாகவும் கூறினான்.

அதைக் கேட்ட போலீஸ் கமிஷனர் வெட்கித் தலைகுனிந்த வராய், அதற்குமேல் அவனிடம் எவ்வித வார்த்தையும் சொல்லாமல் அவ்விடத்தைவிட்டு வெளியில் போய்விட்டார்.

சரியாகப் பதினோருமணி ஆயிற்று. இரண்டு சிப்பாயிகள் அவனிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் நிரம்பவும் முறுக்கான உடைகள் அணிந்து பெருத்த துப்பாக்கி, உருவிய பட்டாகத்தி முதலிய ஆயுதங்களை ஏந்தியவர்களாய்ப் பயங்கரமாகத் தோன்றினர். அவர்கள் கலியாணசுந்தரத்தை நடத்திக் கொண்டு அவ்விடத்தைவிட்டு வெளிப்பட்டு சிறைச்சாலையின் வாசலை அடைந்தனர். அவ்விடத்தில் இரண்டு பிரம்மாண்டமான குதிரைகள் பூட்டப் பெற்றதும், நன்றாக மூடப்பட்டதுமான ஒரு பெட்டிவண்டி ஆயத்தமாக நிறுத்தப்பட்டிருந்தது, காசாரிகள் வண்டியின்மேல் சித்தமாக உட்கார்ந்து கொண்டிருந்தனர். லாந்தர்களும் கொளுத்தப்பட்டி