பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 131 இவர்கள் சாதாரண மனிதர்கள்போல அல்லவா உடுப்புப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்?’ என்றான்.

முன்னவன், “அவர்கள் என்னவிதமான உடுப்புப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கக்கூட முடியாமல் போய்விட்டதே. அவர்கள் சாரணர்களாகத்தான் இருக்க வேண்டும். இந்த அகாலத்தில் வேறே யாரும் இவ்வளவு அவசரமாய்ப் போகவேண்டிய அவசியமிராது?’ என்றான்.

பின்னவன், ‘ஏன்? நான் நன்றாகப் பார்த்தேனே! அவர்கள் உத்தியோக உடுப்புப் போட்டுக் கொள்ளவே இல்லை; சொந்த உடைகள்தான் அணிந்து கொண்டிருக்கிறார்கள். ஆகையால், அவர்கள் சர்க்காரால் அனுப்பப்பட்ட சாரணர்களாக இருக்க மாட்டார்கள் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது என்றான்.

முன்னவன், ‘உடுப்புகளிலிருந்து நாம் எதையும் நிச்சயமாகச் சொல்லமுடியாது. இப்போது இராக்காலமாயிருப்பதால், இவர்கள் சாதாரண உடுப்புகளைப் போட்டுக் கொண்டிருக்க லாம்; பொழுது விடிந்தவுடனே உத்தியோக உடுப்புகளைப் போட்டுக் கொள்ளலாம்” என்றான்.

இப்படி அவர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து கொண்டிருக்க, வண்டி மேன்மேலும் சென்று கொண்டே இருந்தது.

ஆனால், நமது கலியாணசுந்தரம் மாத்திரம் வேறு விதமாக எண்ணிக் கொண்டிருந்தான். கண்பொறி தெறிக்கத்தக்கபடி அவ்வளவு விசையோடு சென்ற குதிரைப்பிரயாணிகள் இருவரும், தாதியால் குறிக்கப்பட்ட இரண்டு மனிதர்களாகத் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவனது மனதில் உதித்தது. அவர்கள் வண்டியைக் கடந்து விரைவாகச் சென்றனர். ஆனாலும், கலியாணசுந்தரத்தின் கூர்மையான விழிகள் அவர்களது வடிவத்தை நன்றாகப் பார்த்துவிட்டது. அதற்குமுன்