பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i42 - பூர்ணசந்திரோதயம்-4 அடக்கி உலகைத் துறந்து கடுந்தவம் புரியும் தபோதனர் களது மனதையும் வெகுசுலபத்தில் கலைத்துப் பேரின்ப நாட்டத்தை மறந்து சிற்றின்ப சுகத்தைத்தேடச் செய்யத்தக்க மகா அபாரமான வசீகரக் காட்சியாக இருந்தது.

அந்தத் தருணத்தில் மற்ற எல்லா ஸ்தலங்களைக் காட்டிலும் பூர்ணசந்திரோதயம் கொலுவிருந்த மணிமாடம் பதினாயிரம் மடங்கு அதிகரித்த வனப்பும் கவர்ச்சியும் உடையதாக விளங்கியது. அந்த மாடத்தில் பதிப்பிக்கப் பெற்றிருந்த கோடானு கோடி நவரத்ன மணிகளெல்லாம் திடீரென்று உயிர் பெற்றுக் கண்களை விழித்துக் கொண்டனவோ, அல்லது, அத்தனை மணிகளும் திடீரென்று அத்தனை நட்சத்திரச் சுடர்களாக மாறிப் போயினவோவென்று ஐயுறும்படி அவளது பளிங்கு மண்டபம் முழுதிலும் அமைக்கப் பெற்றிருந்த ஸர விளக்குகள் சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை, நீலம் முதலிய எண்ணிறந்த நிறங்களைக் கொண்ட அழகிய கண்ணாடிக் கூண்டுகளுக்குள் ஜ்வலித்துக்கொண்டிருந்தன. பஞ்சவர்ணக் கிளிகள் ஓயாது கொஞ்சிக் கொண்டிருந்தன. அன்றில் பறவைகள் ஒன்றுக்கொன்று முத்தங்கொடுத்துக் கொண்டி ருந்தன. மணிப்புறாக்கள் மன்மத பாணங்களால் அல்லல்பட்டு உணர்வுகலங்கி என்றும் சலியாத கலவிப் பிரசங்க நாடகத்தில் தங்களது முழுக்கவனத்தையும் பொழுதையும் செலுத்திக் கொண்டிருந்தன. பூர்ணசந்திரோதயம் மற்ற நாட்களில் தன்னை அலங்கரித்துக் கொண்டதைவிடக் கோடி மடங்கு அதிக வசீகரமாகவும் விநோதமாகவும் அலங்கரித்துக் கொண்டு அப்போதே கந்தருவலோகத்திலிருந்து நேராக வந்திறங்கிய தெய்வீகசக்தி வாய்ந்த ஸுரமங்கை போலத் தேஜோமயமாக ஒரு வெல்வெட்டு ஸோபாவின் மீது உட்கார்ந்திருந்தாள். விண்ணுலகிலும் மண்ணுலகிலுமுள்ள அழகுகளெல்லாம் ஒன்று கூடி அவளது ரூபமாய் வந்ததோ என்னலாம்படி அந்த மனமோகன அணங்கு அழகுத் திரளாகவும் இன்பப்