பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பூர்ணசந்திரோதயம் - 4 அன்னியர் இன்னமாதிரிதான் நடந்துகொள்ள வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்டிருக்கும் உத்தரவை மாற்றக்கூடிய அதிகாரத்தை உன்னுடைய எஜமானர் எப்போது முதல் வகித்துக் கொண்டார்? என்னுடைய தாதிமார்களுக்குத் தெரியாத அப்படிப்பட்ட பரம ரகசியமான சங்கதி எனக்கும் உன் எஜமானருக்கும் என்ன இருக்கிறது? அந்த ரகசியத்தை வெளியிடு’ என்றாள்.

அங்கிக்குள் மறைந்திருந்தவர், ‘'நான் நம்முடைய இளவரசரால் அனுப்பப்பட்டு இங்கே வந்தேன். நீங்கள் ஜெகன்மோகன விலாசத்திலிருந்து இங்கே வருவதற்குமுன் இளவரசருக்கு ஒரு கடிதம் எழுதினர்களாம். அதில் நீங்கள் ஒரு நிபந்தனை எழுதியிருந்தீர்களாம். அதாவது, நீங்கள் இந்த அந்தப்புரத்துக்கு வருவதானால், இளவரசர் சரியாக இரண்டு மாச காலம் வரையில் உங்களைப்பார்க்கக் கூடாதென்றும், இரண்ட மாத காலம் கழிந்த மறுநாள் இரவில் சரியாக ஒன்பது மணிக்கு வந்தால், அவர் உங்களோடு சந்தோஷமாய் இருக்க இடம் கொடுப்பீர்கள் என்றும் நீங்கள் எழுதி இருந்தீர்களாம். அதுபோல, நேற்றோடு இரண்டு மாச காலம் கழிந்துபோய் விட்டதாம். இன்றையதினம் ஒன்பது மணிக்கு அவர் இங்கே வந்து உங்களோடு பேச நிரம் பவும் ஆவலாக இருப்பதால் உங்களுடைய சமயத்தைத் தெரிந்துகொண்டு வர என்னை அனுப்பி வைத்தார். இது உங்களுடைய தாதிமாருக்குத் தெரியக்கூடாத விஷயம் என்பது இனி நான் உங்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டும் என்பதில்லை. நீங்கள் சற்றுமுன் என் மேல் கொண்ட கோபம் இனியாவது தணிந்து போகும் என்று நினைக்கிறேன்’ என்றார்.

அதைக் கேட்ட பூர்ணசந்திரோதயம் அப்போதே அந்த விஷயத்தின் நினைவைக் கொண்டவள் போல நடித்து, “ஒகோ அப்படியா ஆம் ஆம்! நான் இளவரசருக்கு அந்த மாதிரி கடிதம் எழுதியது உண்மைதான். ஆனால், அதன்பிறகு என் மனம் வேறு விஷயங்களில் சென்று முற்றிலும் மாறிப்போய்