பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 153 இருப்பேன்! இந்த இரண்டுமாசகாலத்தில் நீ என் மனசைவிட்டு ஒருநொடி நேரம் கூட அகன்று இருந்ததே கிடையாது. இந்த இரண்டு மாசகாலமும் எப்போது தொலையும் தொலையும் என்று நான் எதிர்பார்த்துக் கட்டுக்கடங்கா ஆவல் கொண்டு தவித்தது கடவுளுக்கே தெரியவேண்டும். இப்போது நான் உன்னைத் தான் என்னுடைய உயிர் நிலையாக மதித்திருக் கிறேன். இனி என்ஆயுசுமுடிவுகால பரியந்தம் அப்படியேதான் நான் உன்னை மதித்து நன்கு நடத்துவேன் என்பது சத்தியமான விஷயம். இந்த இரண்டு மாசகாலத்தில் நான் உன்னை நடத்திய மாதிரியில் உன் மனம் அதிருப்தியாவது சந்தேகமாவது கொள்ளும் படியாக நான் நடந்து கொண்டிருப்பேன் என்று நினைக்கவில்லை. அன்றைய தினம் நான் உன்னுடைய ஜெகன்மோகன விலாசத்துக்கு வந்திருந்த காலத்தில் கடைசியாக நீ எனக்குச் செய்த வாக்குறுதியை நீ மறந்திருக்க மாட்டாய் என்று நினைக்கிறேன். இந்த இரண்டு மாசகாலத்தில் நீயும் என்னைப்பற்றி அடிக்கடி நினைத்துக் கொண்டு தான் இருந்திருப்பாய் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். அன்றைய தினம் என்னிடம் அவ்வளவு தூரம் பேசி என் மனம் போல நடக்க இணங்கிய நீ அதன்பிறகு எனக்கு எழுதிய கடிதத்தில் இரண்டு மாதத் தவணை கொடுக்க வேண்டும் என்று எழுதியிருந்ததைப் படிக்க என் மனசில் அபாரமான பெருத்த இடி விழுந்தது போலவே இருந்ததன்றி வேறல்ல. ஆனாலும், நீ சொல்லியிருந்த நியாயத்தை ஒப்புக் கொள்ளவேண்டியது அவசியமாகத் தோன்றியது ஆகையாலும், உன் மனம் கோணாமல் நடந்துகொள்ள வேண்டுமென்று நினைத்துமே, மகா கொடுமை யானதாகத் தோன்றிய உன்னுடைய இந்த நிபந்தனையை நான் ஒப்புக் கொண்டேன். இந்த இரண்டு மாச காலமும் இரண்டு கற்பகாலம் அகோர தவம் புரிவதுபோல அல்லும் பகலும் அநவரதமும் உன்னை நினைத்து நினைத்து உருகி உயிரழிந்து மெலிந்து உழன்று கிடந்தேன். இன்றைய தினம் நான் கண் விழித்தெழுந்த பிறகு பட்ட கஷ்டம் இந்த