பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i2 பூர்ணசந்திரோதயம் - 4 அனுப்பட்டதென்ற செய்தியை நான் சற்றுமுன் சொன்னேன் அல்லவா? அந்தக் கடிதம் இதோ என் வசத்தில் இருக்கிறது. இதை வாங்கி படித்துப் பாருங்கள்” என்று கூறியவண்ணம் தமது

சட்டைப் பையிலிருந்த ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார்.

வீலாவதி, நிரம்பவும் கலக்கமும் கிலியும் அடைந்தவளாய் மெல்ல நடந்து வந்து அந்தக் கடிதத்தை வாங்கினாள். அப்போது அவளது கை வெடவெடவென்று நடுங்கியது. முகம் மாறுபட்டது. அவள் அந்தக் கடிதத்தை வாங்கிப் பிரித்துப் படிப்பவள் போலப் பாசாங்கு செய்தாள். அது தன்னால் எழுதப்பட்டு தோட்டக்காரன் மூலமாகத் தஞ்சைக்கு அனுப்பப்பட்ட மொட்டைக் கடிதம் என்பது சந்தேகமறத் தெரிந்தது. ஆனாலும், அவள் அப்போதே முதன் முதலாக அதைப் பார்த்துப் படிப்பவள் போல அளவற்ற வியப்பும் பிரமிப்பும் தோற்றுவித்தவளாய் அதை இரண்டு தரம் படித்தாள். உடனே இன்ஸ்பெக்டர், ‘பார்த்தீர்களா கடிதத்தை? அதன் எழுத்தைப் பார்த்தால் யாரோ ஒரு பெண்பிள்ளையின் எழுத்தைப் போல இருக்கவில்லையா?” என்று கூறியவண்ணம் கடிதத்தைத் தமது கையில் வாங்கிக் கொண்டார்.

லீலாவதி, “ஆம்; அப்படித்தான் இருக்கிறது. இப்போதுதான் எனக்கு இன்னொரு விஷயம் தெரிகிறது. என் புருஷர் வேறே யாரோ ஒரு ஸ்திரீயினிடத்தில் சிநேகமாக இருந்திருக்கிறார் என்றும், அந்த ஸ்திரீயே ஏதோமுகாந்திரத்தினால் இப்படி எழுதி அவரைக் காட்டிக் கொடுத்திருக்க வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன். ஆனால், இந்த விஷயத்துக்கும் பவானியம்பாள் புரத்து ஜெமீந்தார் காணாமல் போன விஷயத்துக்கும் என்ன சம்பந்தம் என்பது எனக்கு இன்னமும் விளங்கவில்லையே’ என்றாள்.

இன்ஸ்பெக்டர், “அதை நானே விளங்க வைக்கிறேன். இந்த பவானியம்பாள்புரம் ஜெமீந்தார்காணாமல்போன விஷயத்தில் தக்க விசாரணை செய்து, அவரைக் கண்டுபிடிக்கும்படி