பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பூர்ணசந்திரோதயம்-4 ஆனால், அதன் பிறகு மகாராஜா என்னை ஒரு பொருட்ட்ாக மதித்து என்னுடைய குடிசையை நாடிவந்து நிரம்பவும் பூஜிதையான வார்த்தைகளை உபயோகித்து என்னை அபாரமாகப் பெருமைப்படுத்திப் பேசி, என் மனசை மயக்கி என் உன்: லேக்தையும் கொள்ளை கொண்டுகங்கள் வசமாக்கிக்கொண்டீர்கள். ஆகையால், நான்நிலைகல்ங்கி புத்தி மாறாட்டம் அடைந்து, தேனில் வீழ்ந்த ஈபோலத்தங்களுடைய மோகனாஸ் திர வலையில் சிக்கி சுயேச்சையாக நடக்கும் திறமையும் சுய அறிவையும் இழந்து, எடுப்பார் கைக்குழந்தை போலத் தங்களுடைய வசத்தில் நான் நன்றாக அகப்பட்டுக் கொண்டேன். இந்த உலகத்தில் கடவுள் சர்வ வல்லமையுள்ளவராய் இருப்பது போலத் தாங்கள் இந்த

ராஜ்ஜியத்தில் சர்வவல்லமையும் சர்வாதிகாரமும் உடையவராக இருப்பதால், அப்படிப்பட்ட மகா அபாரமான பெருமை வாய்ந்த தங்களுடைய கட்டளையை மீற எனக்குக் கொஞ்சமும் துணிவு உண்டாகவில்லை. அதவுமன்றி, மன்மதாகாரமான தங்களுடைய திரு உருவத்தைக் கண்டும், தங்களுடைய மதுரமொழியைக் கேட்டும் மனம் பேதுறாத பெண்ணும் இந்த உலகத்தில் இருப்பாளா என்பதே சந்தேகம். இந்த இரண்டு காரணங்களினால் நான் தங்களுக்கு வசப்பட்டுத் தாங்கள் சொன்னதுபோல நடந்து கொள்வதாக ஒப்புக் கொண்டேன். அதன்பிறகு, நான்தங்களுக்குக் கடிதம் எழுதியபோது, நான்றாது நூலில் படித்த விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. என்னை அடைந்தபிறகு தங்களுக்கு எவ்விதக் கெடுதலும் இல்லாம லிருக்க வேண்டுமே என்றும், தாங்கள் எப்போதும் போல மங்கள கரமாகவே இருந்துவாழ வேண்டுமென்றும் நான் எண்ணிக் கொண்டேன். அதுவுமன்றி, நான் தார்வார் தேசத்து மகாராஜனுடைய நெருங்கிய பந்துவென்றும், நான் விருந்தாளியாக வந்திருக்கிறேன் என்றும் சொல்லும்படியும் நான் கேட்டுக்கொண்டேன். என் கோரிக்கைகளை எல்லாம் தாங்கள் பூர்த்தியாக நிறைவேற்றி வைத்து விட்டீர்களென்பது