பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 159 பூர்ணசந்திரோதயம் பலவாறு அபிநயம் செய்து தனது அழகையும் வசீகரத்தன்மையையும் முன்னிலும் பன்மடங்கு பெருக்கிக் காட்டித் தனது முத்துப் போன்ற பல் வரிசைகள் வெளியில் தோன்ற அவரை நோக்கிக் கொஞ்சலாகப் பேசத் தொடங்கி, ‘மகாராஜா என்னைக் கொணர்ந்து இங்கே வைத்தபிறகு நான் யாரையும் என்னிடம் நெருங்க விடாமல் தனியாகவே இருந்து வந்தேன். ஆகையால், பொழுது போவது எனக்கு நிரம்பவும் கடினமாகவும் வேதனையாகவும் இருந்தது. ஆகையால் நான் மகாராஜாவின் சரஸ்வதி மகாலிலுள்ள புஸ்தகங்களில் சிலவற்றை வரவழைத்துப் படிக்கத் தொடங்கி னேன். அந்தப் புஸ்தகங்களுள் கருட புராணமென்று ஒரு புராணம் இருந்தது. அதைப் படித்தபிறகு என்மனசில் உண்டான பெருத்த திகிலினால், எனக்கு உடனே குலை நடுக்கம் உண்டாகிவிட்டது. அடிவயிற்றில் குழப்பம் ஏற்பட்டு என்னால் சகிக்க முடியாத பெருத்த சங்கடத்தை உண்டுபண்ணிவிட்டது. அது முதல் எனக்கு இரவுகளில் தூக்கமே பிடிக்காமல் போய் விட்டது. அந்தப் புஸ்தகத்திலுள்ள பயங்கரமான விஷயங்களே ஓயாமல் என் மனசில் தோன்றிக் கொண்டிருக் கின்றன. இதற்குமுன் நான் எண்ணியிருந்த பல எண்ணங்களும், கொண்டிருந்த கொள்கைகளும், செய்திருந்த முடிவுகளும், அடியோடு மாறிப்போய்விட்டன. நான் இதுவரையில் செய்த தவறுகள் போக, இனியாவது ஒர் இம் மியளவும் தவறு செய்யாமல் ஒழுங்காக நடக்கவேண்டும் என்ற பிடிவாதமான ஒரு தீர்மானம் என் மனசில் உண்டாகி வேரூன்றி விட்டது” என்றாள்.

இளவரசர் நிரம்பவும் பிரமித்துக் கலங்கி, ‘'பூர்ணசந்திரா! என்ன ஆச்சரியம் இது ஏதோ ஒரு பைத்தியக்கார புஸ்தகத்தைப் பார்த்துவிட்டு நீ இப்படிக் கலங்குவதும் பயப்படுவதும் ஆச்சரியமாக இருக்கிறதே! உன்னுடைய ஆழ்ந்த விவேக மென்ன திடமான மனமென்னர் பகுத்தறிவென்ன! நீ இப்படி

go.3.IV-11