பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் i 3 அவருடைய குமாரரான நீலமேகம்பிள்ளை என்னைக் கேட்டுக் கொண்ட தினம் முதல், இரண்டு மூன்றுநாளைக் கொருதரம் அவர் என்னுடைய ஜாகைக்கு வந்து, ஏதாவது தகவல் கிடைத்ததா என்று விசாரித்து விட்டுப் போவது வழக்கம். அதுபோல, அவர் இன்றையதினம் காலையில் என் வீட்டுக்கு வந்திருந்தார். இதற்குமுன் அவர் வந்தால், நான் வெளித் திண்ணையில் அவரை உட்காரவைத்துக் கொண்டு பேசி அனுப்பிவிடுவது வழக்கம். இன்றையதினம் நான் வீட்டுக்கு உட்புறத்தில் என்னுடைய அறைக்குள் மேஜையின் பக்கத்தில் உட்கார்ந்து ஒர் அவசரமான கடிதம் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் அவர் வந்தார் ஆகையால், அவரை உள்ளேயே வரவழைத்து மேஜைக்குப் பக்கத்தில் இருந்த இன்னொரு நாற்காலியில் உட்கார வைத்து அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். என் உத்தியோகத்துக்குச் சம்பந்தப்பட்ட ஏராளமான கடிதங்களும், வேறு பல தஸ்தாவேஜுகளும் எனக்கு எதிரிலிருந்த மேஜையின்மேல் சிதறிக்கிடந்தன. இந்த அநாமதேயக் கடிதமும் அந்த மேஜையின் மேல் பிரிந்து கிடந்தது. இந்தக் கடிதத்தின் எழுத்து அவருடைய திருஷ்டியில் தற்செயலாகப்பட்டது. உடனே அவர் திடுக்கிட்டுத் தம்மை மறந்து இந்தக் கடிதத்தைச் சடக்கென்று எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு இதன் எழுத்தை உற்று உற்றுப் பார்த்தார். ‘ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்றும், எங்கள் அதிகார தோரணையில் எங்களிடம் இருக்கும் ரகசியமான தஸ்தா வேஜுகளை அனுமதி இல்லாமல் இப்படி எடுத்துப் பார்க்கலாமா? என்றும் நான் கேட்டேன். அவர் என்னிடம் நயந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டதன்றி, இந்தக் கடிதத்தை எழுதிய பெண்பிள்ளையார் என்பதைக் கண்டுபிடித்தால், அவள் மூலமாகத் தமது தகப்பனாரைப் பற்றிய தகவலைத் தெரிந்து கொள்ளலாம் என்று சொன்னார். எப்படி என்றால், அவர் சில தினங்களுக்கு முன் அவருடைய தகப்பனாரின் கைப்பெட்டியை உடைத்துப் பார்த்தாராம். அதற்குள் சில கடிதங்கள் இருந்து