பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 பூர்ணசந்திரோதயம்-4 வில்லையா? ஆகையால், நாம் இந்த கருட புராணத்தை மாத்திரம் பொய்யென்று நினைக்க என்ன ஏது இருக்கிறது, அப்படித்தான் நடக்கத்தகாத விஷயம் அதில் என்ன இருக்கிறது, இன்னின்ன குற்றங்கள் செய்தவர்கள் இன்னவிதம் தண்டிக்கப் படுகிறார்கள் என்று தானே அது சொல்லுகிறது. அதில் என்ன அசம்பாவிதம் இருக்கிறது. இந்தப் பிறப்பில் குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை இல்லாமலா போய் விடும். அவர்கள் எமனுலகில்தண்டிக்கப்படுவதில்லை என்று வைத்துக் கொண்டாலும், அவர்கள் வேறே எவ்விடத்திலாவது தண்டனை அடைந்துதானே தீரவேண்டும். எமனுலகில் தண்டனை அடையாவிட்டால், இந்த ஜென்மத்தில் செய்த குற்றங்களுக்குத் தக்கபடி அடுத்த ஜென்மத்தில் கஷ்டங்களை அனுபவிக்கிறதாகவாவது வைத்துக் கொள்ளவேண்டுமல்லவா! உண்மை எப்படியாவது இருக்கட்டும். முக்கியமாக ஒருவன் ஒரு குற்றம் செய்தால், அதற்காக அவன் தண்டனை அடைய வேண்டும் என்பது மனிதருடைய நியாஸ்தலத்திலேயே இருக்கும்போது, சர்வக்ஞராகிய கடவுளின் நியாயஸ்தலத்தில் இல்லாமலா போய்விடும். ஆகையால், எந்தக் குற்றத்துக்கும் தக்கபடி தண்டனை கிடைக்கிறதென்பது நிச்சயம். அப்படி யிருக்க, நாம் இந்தக் கருடபுராணத்தைப் பொய் யென்று இலேசில் அசட்டை செய்துவிட முடியுமா? அந்தப் புராணம் உண்மையானது தான் என்று என் மனம் உறுதியாக நம்புகிறது. அது பொய்யென்று மகாராஜா சொல்வதும் சரியல்ல” என்று நிரம்பவும் பரிதாபகரமாகவும் பணிவாகவும் கூறினாள்.

அதைக்கேட்ட இளவரசர் கிலேசமும் வெட்கமும் அடைந்த வராய், ‘ஓகோ ஏதேது! நீ பெருத்த புராணிகர் ஆய்விட்டாயே! நீ சொல்வது போலவே, அந்தப் புராணத்திலுள்ளது எல்லாம் உண்மையென்றே வைத்துக்கொள்வோம். அதற்குப் பயந்தே நீ நடந்து கொள். நீ என் விஷயத்தில் யாதொரு தவறும் செய்ய வேண்டுமென்றும் நான் உன்னை வற்புறுத்தவில்லை. உன்னை நான் சாஸ்திரப்படி கலியாணம் செய்துகொள்ளவும்