பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 167 சம்மதிக்கிறேன் என்று நான் முன்னாலேயே சொல்லியிருப்பது உனக்கு நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன். அதன்படி நடக்க நான் இப்போதும் தயாராக இருக்கிறேன். இன்னம் இரண்டொரு தினங்களுக்குள் நல்லவேளையாகப் பார்த்து அப்போது நம்முடைய கலியாணத்தை நிறைவேற்றி விடுவோம். நமக்கென்ன சாமான்கள் சேகரிக்க வேண்டுமா? மனிதர்களுடைய வருகையை எதிர்பார்க்க வேண்டுமா? ஒன்றுமில்லை. இந்த அரண்மனையில் நித்திய கலியாண மாகவே நாம் நடத்தி வருகிறோம். தினம் ஆறுகாலம் மேளம் வாசிக்கிறார்கள். எப்போதும் புரோகிதர்கள் பஞ்சாங்கம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். வேளைக்கு வேளை பதினாயிரம் மனிதருக்கு குறையாமல் சமாராதனை சாப்பிடு கிறார்கள். எங்கு பார்த்தாலும் வாழை மரங்களும், பச்சைத் தோரணமும், அலங்காரங்களுமே எப்போதும் காணப்படு கின்றன. மாங்கலிய தாரணம் ஒன்று தவிர, மற்றபடி இவ்விடத்தில் நித்திய கலியாணமே நடந்து வருகிறது. இத்தனை வைபவங்களினிடையில் நாம் தாலி கட்டுகிறது தானா ஒரு கடினமான வேலை. ஒரு நிமிஷத்தில் கட்டி விடலாம்; அதைப் பற்றி நீ கவலைப்படாதே. இனி நீ கருட புராணத்தில் சொல்லப்பட்டிருப்பதை நினைத்துப் பயப்படவும் தேவையில்லை. உன்னை நான் விபசார தோஷத்துக்கு ஆளாக் குவேன் என்ற திகிலும் இனி உனக்கு வேண்டாம். இனி நீ உன் மனசைத் திடப்படுத்திக் கொள்ளலாம்’ என்று கூறி அவளது முகத்தை உற்று நோக்கினார். அதற்குமேல் அவள் எவ்வித ஆட்சேபணையும் கூறமாட்டாள் என்றும் கூற இடமில்லை என்றும் அவர் நினைத்து, எப்படியும் அந்த வடிவழகியை அன்றையதினம் தாம் வசப்படுத்தி விடலாமென்று உறுதியாக எண்ணிக்கொண்டார். ஆனால், அவரது கடைசியாக சொல்லைக்கேட்ட பூர்ணசந்திரோதயம் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்த விசனமும் கலக்கமும் அடைந்தவளாய்ச்சிறிது நேரம் தத்தளித்துத் தயங்கி, ‘மகாராஜா