பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 185

அதைக் கேட்ட இளவரசர், “நீ பேசுவது நிரம் பவும் வேடிக்கையாக இருக்கிறது. நானே வேண்டுமென்று இந்தக் கடிதத்தை அபாண்டமாக சிருஷ்டித்துக் கொண்டுவந்திருப்பேன் என்று நீ சந்தேகப்படுவது மிகமிக விநோதமாக இருக்கிறது. நீ இன்றையதினம் கட்டாயம் என்னுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதாகக் கடிதம் எழுதியிருக்கிறாய். அதுபோலவே நீ நடப்பாய் என்று நான் இதுவரையில் முழுதும் நம்பி இருந்து அந்தக் காலம் தவறாமல் இப்போது இங்கே வந்திருக்கிறேன். அப்படியிருக்க, நீ என்னுடைய பிரியப்படி நடக்க மாட்டாய் என்று நான் சந்தேகப்படவே காரணமில்லையே. நீ கருடபுராணம் வாசிக்கிறாய் என்பது எனக்குத் தெரியுமா? அதனால் உன்னுடைய தீர்மானம் மாறப்போகிறது என்பது எனக்கு எப்படித் தெரியும்? நீ இப்படி மாறுபட்டிருப்பாயென்று நான் இதுவரையில் சொப்பனத்திலும் நினைக்கவில்லை. அப்படியிருக்க, நான் இந்தக்கடிதம் நிர்மாணம் செய்யவேண்டிய அவசியமே இல்லை. அதுவுமன்றி, இந்தக் கடிதத்தில் பூனா நகரம் என்ற பெயரும் தேதியும் உள்ள தபால் முத்திரை குத்தப்பட்டிருப்பதை நீ கவனித்துப் பார்த்தால், இது உண்மையிலேயே அவ்விடத்திலிருந்து வந்தது என்பது தெளிவாக விளங்கும். நான் அபாண்டமாக இப்படிப்பட்ட அவதுறைச் சொல்லக்கூடியவன் என்றாவது, கல்மனம் உடையவன் என்றாவது, உன் விஷயத்திலும் நான் இப்படி நடந்து கொள்வேன் என்றாவது நீ நினைப்பது சரியல்ல. காலக்கிரமத்தில் நீ என்னோடு பழகப் பழக என்னுடைய உண்மையான குணம் எப்படிப் பட்டது என்பது உனக்கு ஸ்பஷ்டமாகத் தெரிந்துபோகும். என்னுடைய மனப்போக்கும் அவளுடைய மனப்போக்கும் ஒத்துவராமல் இருந்த காரணத்தினால், நான் இந்த இரண்டு வருஷ காலமாக அவளுடைய அந்தப்புரத்துக்குப் போவதையும் அவளோடு பேசுவதையும் விட்டுவிட்டேன். அதனால், மற்றபடி அவளுடைய மதிப்புக்காவது மேம்பாட்டுக்காவது