பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 பூர்ணசந்திரோதயம்-4

எழுதிய மனிதனுக்கும் தங்கள் பட்டமகிஷிக்கும் ஏதேனும் காரணத்தினால் மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கலாம். அவர்கள் கர்ப்பிணியாக இருக்கிறார்கள் என்று நம்பத்தகுந்த பெரிய சங்கதியாக எழுதிஅனுப்பிவிட்டால், எவ்வித சந்தேகமும் கொள்ளாமல் உடனே நம்பி விடுவார்களென்று நினைத்து அந்த மனிதன் இப்படிப்பட்ட தந்திரம் செய்திருக்கலாம். அவன் எதிர்பார்த்தது போலவே தாங்கள் செய்துவிடக்கூடாது. தாங்கள் உடனே புறப்பட்டு அந்த ஊருக்குப் போய் நேராகத் தங்களுடைய சம்சாரத்தினிடம் போய், அவர்கள் சந்தேகப்படாத படி கவனித்துப் பார்த்தால் உண்மை எப்படியும் விளங்கிப் போகும். அவர்கள் கர்ப்பிணியாக இருந்தாலும், அல்லது, சமீபகாலத்தில் பிரசவித்திருந்தாலும், அவர்களுடைய தேக மெலிவிலிருந்தும், முக வெளிறிலிருந்தும் நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். பிறகு வேறு சாட்சியே தேவையில்லை. தங்களுடைய பிரியப்படியே நடந்து கொள்ளலாம். அதுவு மன்றி, இந்த ஊரிலிருந்து யாரோ சில தாதிகள் அனுப்பப் பட்டிருப்பதாகவும் தெரிகிறது. அவர்கள் தங்களுக்கு நன்றாகத் தெரிந்தவர்களாக இருக்கலாம். அவர்களைக் கண்டு தந்திரமாக விசாரித்தும் உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்’ என்றாள்.

உடனே இளவரசர், ‘அப்படியானால் இவ்விடத்திலுள்ள முக்கியமான ராஜாங்க விஷயங்களையெல்லாம் இப்படியே நிறுத்திவிட்டு இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப் பூனா தேசத்துக்கு நான் போய் வேஷம் போட்டுக் கொண்டி ருந்து அவளுடைய நடவடிக்கைகளை எல்லாம் கண்ணால் பார்க்க வேண்டுமென்று நீ சொல்லுகிறாயா? இந்த வெட்கக்கேடான விஷயத்தை நான் இந்தக் கடிதத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ளும் இழிவும் அவமானமும் போதா வென்று நினைக்கிறாயா?” என்றார்.

பூர்ணசந்திரோதயம் நிரம் பவும் பயபக்தி விநயத்தோடு பேசத்தொடங்கி, ‘இந்தக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது