பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 189

உண்மையில் நடந்த விஷயம் என்பது நமக்கு நிச்சயப்படுகிற வரையில், இதை நாம் இழிவாகவும் அவமானமாகவும் கருதலாமா? மகோன்னத பதவியிலுள்ள ஒருவருடைய கண்ணியத்துக்கும் வாழ்நாள் முடிய அனுபவிக்கும் குடும்ப சுகங்களுக்கும் அபாயம் நேரக்கூடிய மகா பெரிய விஷயம். ஆகையால், இதையும் மகாராஜா முக்கியமான ராஜாங்க விஷயங்களுள் ஒன்றாகவே பாவித்து எப்படியாவது பிரயத்தனப்பட்டு இதன் உண்மையைக் கண்டுபிடிப்பது அத்தியாவசியமான காரியம். இந்தப் பிரயாசை மகாராஜாவுக்கு ஒரு பொருட்டல்ல. ஒருவாரகாலத்துக்குள் பூனாவுக்குப் போய் உண்மையைத் தெரிந்துகொண்டு திரும்பி வந்துவிடலாம். இந்த எட்டு தினங்கள் வரையில் இவ்விடத்துக் காரியங்களைத் தங்களுடைய மந்திரிமார்கள் பார்த்துக் கொள்ளமாட்டார்களா? அப்படித் தாங்களே கட்டளை பிறப்பிக்க வேண்டிய பெரிய விஷயம் ஏதாவது இருந்தால் இங்குள்ளவர்கள் அஞ்சல் தபால் மூலமாகப் பூனாவுக்கு அனுப்பி தங்கள் உத்தரவைப் பெற முடியாதா? தாங்கள் மனசு வைத்தால், இதை எப்படியாவது நிறைவேற்றலாம். இந்தக் கடிதத்திலுள்ள விஷயம் அற்ப சொற்பமான சாதாரண விஷயமல்ல. இதன் பொருட்டு வேறே மனிதரை அனுப்புவதும் தகுதியானதல்ல. ஆகையால், மகாராஜாவே எப்படியாவது பிரயாசைப்பட்டு நேரில் பூனாவுக்குப் போய் விஷயங்களை நிச்சயித்துக் கொண்டு வருவதே சர்வ சிலாக்கியமானது. மகாராஜாவுக்குத் தெரியாததற்கு நான் அதிகமாக என்ன சொல்லப் போகிறேன்’ என்று நிரம் பவும் மாதுரியமாகவும் இளவரசர் ஆயாச மடையாத படியும் கூறினாள்.

இளவரசர், ‘இந்த விஷயத்தில் அவ்வளவு பிரயாசை எடுத்துக்கொண்டு பூனாவுக்குப் போகவும், அவ்விடத்தில் ஒளிந்து பிடிக்கும் கண்ணியக்குறைவும் இழிவுமான காரியத்தைச் செய்யவும் எனக்குக் கொஞ்சமும் பிரியமில்லை. ஆனாலும் உன்பொருட்டு நான் அதைச் செய்ய ஒப்புக்