பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

io94 பூர்ணசந்திரோதயம் -4 டக்கக்கூடிய காரியமன்றி, இளம்பிராயப் பெண்பிள்ளையான லீலாவதியோடு அவர் அது விஷயமாகப் பேசவேண்டிய பிரமேயமே இல்லையென்பதைக் கட்டாரித்தேவன் எளிதில் கண்டு கொண்டான். ஆகவே, அவர் லீலாவதியினிடத்திலே தான் ஏதோ அலுவலாக வந்திருக்கிறார் என்று அவன் ஒருவாறு நிச்சயப்படுத்திக் கொண்டதன்றி, தான் அவசரமாக வெளியில் போக வேண்டியதில்லை என்றும் முடிவு செய்து கொண்டான். இன்ஸ்பெக்டர் உண்மையில் தன்னைப் பிடிக்கவே அந்த மாளிகைக்கு வந்திருப்பாரானால், அவர் நிரம் பவும் முன்னெச்சரிக்கையுள்ள மனிதர் ஆகையால், அந்த மாளிகை யின் நாற் புறங்களிலும் ஜெவான்களைப் பந்தோபஸ்தாக முதலில் வைத்துவிட்டே பிறகு தன்னைப் பிடிக்க உள்ளே வந்திருப்பாரென்ற நினைவுண்டானது. ஆகையால், தான் அப்போது அந்த மாளிகையைவிட்டு வெளிப்பட்டுப் போக முயற்சிப்பதைவிட உட்புறத்தில் எங்கேயாவது மறைந்து கொண்டிருப்பதே உசிதமானதென்று கட்டாரித்தேவன் முடிவு செய்துகொண்டான். தான் அந்த மாளிகைக்குள் எங்கே போனாலும் அதனால் தனக்கு ஒருவிதத் தீங்கும் நேரிடாதென்று துணிவும் உண்டாயிற்று. வேலைக்காரர் யாராகிலும் தன்னைக் கண்டு பிடித்து ஜெமீந்தாரிடத்தில் கொண்டுபோய் விட்டால் தான் லீலாவதியினிடம் வந்ததாகச் சொன்னால், அவள் முற்றிலும் தனது வசத்தில் அகப்பட்டுக் கொண்டிருப்பதால், அவள் தன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாள் என்ற தைரியம் அவனது மனதில் திடமாக இருந்தது. அதுவுமன்றி, மருங்காபுரி ஜெமீந்தாரினது மாளிகையில் குபேரசம்பத்துக்கு ஒப்பிடத்தக்க பெருந் திரவியம் இருப்பதாக அவன் பலதடவைகளில் கேள்வியுற்று, என்றைக்காகிலும் ஒரு நாள்சமயம் பார்த்துத்தான் அந்த மாளிகைக்குள் நுழைந்து சகலமான பொருள்களையும் கொள்ளையடித்துக் கொண்டு போய்விட்டால் அதன்பிறகு தனது தரித்திரமே ஒழிந்து போகும் என்றும் அதன்பிறகு தாங்கள் தங்களது பிள்ளை பிள்ளை தலைமுறைக்கும் திருட்டுத்