பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் i 95 தொழிலிலேயே இறங்க வேண்டாம் என்றும் நினைத்து அது விஷயத்தில் அளவற்ற ஆவல் கொண்டு துடித்திருந்தான். ஆதலால், அந்தச் சமயத்தை வீணாக்காது பயன்படுத்தித் தன்னால் இயன்ற அளவு திரவியங்களை அள்ளிக் கொண்டு போவதோடு, எந்தெந்த இடத்தில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்பதையும், மாளிகையின் உட்புற அமைப்பை யும் பார்த்து அறிந்து கொண்டு போய் மறுபடி ஏராளமானதனது ஆள்களோடு வந்து அடியோடு துடைத்துக்கொண்டு போக வேண்டுமென்று அவன் தீர்மானித்துக் கொண்டு சிறிதும் பயமின்றி அவ்விடத்தை விட்டுப் பக்கத்திலிருந்த ஒரு விடுதிக்குள் நுழைந்து அதற்கப்பால் ஒன்றன்பின் ஒன்றாகப் போய்க் கொண்டிருந்த அறைகளைக் கடந்துகொண்டு அப்பால் போனான். அவ்விடத்தில் ஒரு வேலைக்காரனாவது வேலைக்காரியாவது காணப்படாமையால் அவன் முன்னிலும் பன்மடங்கு துணிவடைந்து சுயேச்சையாக நடந்து ஒவ்வோர் அறையாக நுழைந்து ஆங்காங்கு நிரப்பப் பட்டிருந்த விலை மதிப்பற்ற பொருட்களைப் பார்த்துக் கொண்டே சென்றான். அவைகளைப் பார்க்கப் பார்க்க அவனது ஆவலும் வேட்கையும் அபாரமாகப் பெருகின. அந்த நிலைமையில் அவன் ஒரு ஜன்னலண்டை வர அதற்கப்பால் மனிதர் சம்பாஷித்த குரலோசை உண்டானது அவனது செவியில் வந்து தாக்கியது. அவன் உடனே திடுக் கிட்டு சடக் கென்று அவ்விடத்திலேயே நின்று யார் யார் பேசுகிறது என்பதையும், என்ன பேசப்படுகிறது என்பதையும் உற்றுக் கவனிக்கத் தொடங்கினான். முதலில் லீலாவதி பேசிய குரலோசையும் அதன்பிறகு இன்ஸ்பெக்டர் பேசியதும் தெரியவே, கட்டாரித்தேவன் தான் தற்செயலாக அந்த இடத்துக்கு வந்து சேர்ந்ததைப் பற்றி மிகுந்த மகிழ்ச்சியும், குதூகலமும் அடைந்து, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தான் அறிந்து கொள்வது தனக்கு உபயோகமாக இருக்குமென்று நினைத்து அவர்கள் ஒருவருக்கொருவர் சம்பாஷித்துக் கொண்டதை