பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iS6 பூர்ணசந்திரோதயம்-4 நன்றாகக் கவனிக்கலானான். முதலில் லீலாவதி போலீசாரைப் பற்றி இழிவாகப் பேசியதையும், தனது புருஷன் ஏழு வருஷ தண்டனை அடைந்ததைக் குறித்து விசனகரமாகப் பேசினதையும், அதன்பிறகு இன்ஸ் பெக்டர் தாம் வந்த காரணத்தை விவரித்துச் சொன்னதையும் ஒரு சொல்விடாமல் கட்டாரித்தேவன் கேட்டுக் கொண்டே இருந்தான். இறந்துபோன பவானியம் பாள் புரம் ஜெமீந்தாரினது குமாரர் நீலமேகம் பிள்ளை ரகசியமாய் மறைந்து போன தமது தகப்பனாரைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதாகவும், அவர் தமது தகப்பனாரினது பெட்டியிலிருந்து காதற் கடிதங்கள் சிலவற்றைக் கண்டெடுத்த தாகவும், அவைகள் குடும்ப ஸ்திரீயான யாரோ ஒரு பெண்ணினால் திருட்டுத்தனமாக எழுதப்பட்டவை எனவும் இன்ஸ்பெக்டர் சொன்னதையும் கட்டாரித்தேவன் உணர்ந்து கொண்டான். அதுவரையில் அவன் கேட்ட விஷயங்க ளெல்லாம் அவனுக்குப் புதுமையாகவாவது ஆச்சரியமாக வாவது இருக்கவில்லை. ஆனால், அதன் பிறகு அவன் கேள்வியுற்ற விஷயம் அவனது மனதில் அளவற்ற வியப்பையும் பிரமிப்பையும் உண்டாக்கியது. மாசிலாமணிப் பிள்ளைக்கு விரோதமாக யாரோ ஒருபெண் நியாயாதிபதிக்கு அநாமதேயக் கடிதம் எழுதி அனுப்பினதாகவும், அதன்மேலே தான் அவர் கைதியாக்கப் பட்டார் எனவும், அந்தக் கடிதத்தின் எழுத்தும், பவானியம்பாள்புரம் ஜெமீந்தாரினது கைப்பெட்டியிலிருந்து அகப்பட்ட காதல் கடிதங்களின் எழுத்தும் ஒருத்தியின் கையெழுத்து போலவே இருப்பதாகவும் இன்ஸ்பெக்டர் சொன்னதைக் கேட்ட கட்டாரித்தேவன் பெரிதும் ஆச்சரியம் அடைந்து அவற்றின் ரகசியங்களை உடனே யூகித்தறிந்து கொண்டான். பவானியம்பாள்புரம் ஜெமீந்தாருக்குக் காதல் கடிதங்கள் எழுதியவள் லீலாவதியாகத்தான் இருக்க வேண்டுமென்பது கட்டாரித்தேவனுக்குச் சந்தேகமறத் தெரிந்தது. ஆகையால், அதே கையெழுத்துள்ள அநாமதேயக் கடிதத்தை எழுதி நியாயாதிபதிக்கு அனுப்பி மாசிலாமணிப்