பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 19 பிள்ளையைக் கைதியாக்கினவளும் லீலாவதியாகத்தான் இருக்க வேண்டுமென்று கட்டாரித்தேவன் நிச்சயமாக எண்ணிக் கொண்டான். அதுகாறும், அவன் லீலாவதி தனது கணவனிடத்தில் அத்யந்த அபிமானமும் பிரியமும் உடையவள் என்றும், அவள் கடைசிவரையில் உதவி செய்து, தனது கணவன் மரணதண்டனை அடையாமல் காப்பாற்றினாள் என்றும் நினைத்திருந்தான். அந்த விஷயத்தில் அநாமதேயக் கடிதம் ஒன்று எழுதப்பட்டதென்பது அவனுக்குத் தெரியவே தெரியாது. ஆகையால், அவன் அப்போது கேள்வியுற்ற விஷயங்கள் அவனுக்கு முற்றிலும் புதுமையாகவும் தான் எதிர்பார்க்காத தாகவும் இருந்தன. லீலாவதி வெளிப்பார்வைக் குத் தனது புருஷனிடம் வாஞ்சையும் பற்றும் உள்ளவள் போலக் கடைசி வரையில் நடித்தாளே அன்றி உண்மையில் அவள் அவரிடம் உள்ளுறப் பகைமை பாராட்டி, வேண்டுமென்றே அவரை அதிகாரிகளிடம் காட்டிக்கொடுத்து அவருக்குத் தண்டனை நடத்தி வைத்தாள் என்பது கட்டாரித்தேவனுக்கு ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. அதுவுமன்றி, அவ்வளவு தூரம் புலன் கண்டுபிடித்த இன்ஸ்பெக்டர் அவள்தான் அந்தக் கடிதங்களை எல்லாம் எழுதினவள் என்று சுலபமாகக் கண்டு கொள்ளாமல் அவ்வளவோடு அவளைவிட்டுப் போனதும் கட்டாரித் தேவனுக்கு அதிசயமாகத் தோன்றியது. லீலாவதியைப் பற்றிய அந்த முக்கியமான புதிய ரகசியம் தனக்குத் தெரிந்து போனதைப் பற்றி அவன் மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்ததன்றி அதை வைத்துக்கொண்டு அவளை மறுபடியும் மிரட்டி இளவரசர் மூலமாயாவது ஜெமீந்தார் மூலமாயாவது தனது போலீஸ் உபத்திரவத்தை நீக்கிக்கொள்ள வேண்டுமென்றும், அவள் அதற்கு இணங்காவிட்டால் தான் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஒர் ஆளை அனுப்பி, அவர் தனக்கு மன்னிப்பு வாங்கிக் கொடுத்தால், தான் பவானியம்பாள்புரம் ஜெமீன்தார் காணாமல் போனதன் சம்பந்தமான ரகசியம் முழுதையும் வெளியிட்டு அவரைக் கொலை செய்த