பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 - பூர்ணசந்திரோதயம்-4 குழப்பமும் அடைந்து, அந்தப் பெண் என்ன காரணத்தினால் அப்படிக் கதறி அழுகிறாள் என்பதையும் அப்போது தான் என்ன செப்கிறது என்பதையும் அறியாதவனாய்த் தடுமாறி அவ்விடத்திலேயே தரையோடு தரையாக ஒன்றிக் கொண்டிருந்தான். மேன்மேலும் ஷண்முக வடிவு கூச்சலிட்டுப் பிரலாபித்து அழத் தொடங்கி, தான் உட்கார்ந்த நாற்காலியி லிருந்த விசைகள் தன்னை இறுகப் பிடித்துக் கொண்டதாகக் கூறியதைக் கேட்டு, லீலாவதி எவ்வித மறுமொழியும் கூறாமல் திருட்டுத் தனமாக ஒடியதைக் கண்ட கட்டாரித்தேவன் அவர்களது மோசக் கருத்தை அப்போதே ஒருவாறு உணர்ந்து கொண்டான். அவர்கள் யாரோ ஒரு பெண்ணைக் கொணர்ந்து ஏதோ கபடமான எண்ணத்தோடு ரகசியமான அந்த இடத்திற்கு அழைத்துவந்து, ஏதோ யந்திரத்தில் மாட்டி வைத்த தாகவும், அதன்பிறகு முக்கியமான மனிதர் வந்து தமது சதியாலோசனையை நிறைவேற்றப் போகிறார் என்றும், அவன் நினைத்து, அதற்குமேல் என்ன நடக்கப் போகிறதோ என்று நினைத்து நிரம்பவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தான். அவன் சிறிதும் ஈவிரக்கமற்ற மதயானை போன்ற முரட்டு மனிதனானாலும் கல்லும் கரைந்துருகத்தக்க உருக்கமான குரலில் ஷண்முகவடிவு கதறியழுது துடிதுடித்ததைக் காண, அந்த மனிதனது மனம் கூட ஒரு வித இரக்கத்தையும், அனுதாபத்தையும் அடைந்து பதறியது. அவன் வெல்வெட்டு மாடத்தில் லோபாவின் கீழ் ஒளிந்திருந்த காலத்தில் ஷண்முகவடிவின் தேஜோமயமான திரு உருவத்தையும் அழகு வழிந்த முகத்தையும் நன்றாகப் பார்த்து, அவள் தெய்வீகமான சக்திவாய்ந்த உத்தமஜாதிப் பெண்ணென்று நினைத்திருந்தான். அவளது விஷயத்தில் அபாரமான மதிப்பும், விலக்க முடியாத ஒருவிதப் பிரியமும் அவனது மனதில் தோன்றிக்கொண்டே இருந்து வந்தன. ஆதலால், அவள் திடீரென்று பெருத்த தீயில் வீழ்ந்து விட்டவள்போலத் துடிதுடித்துப் புலம்பி அழுததைக் காண, அவனது மனம் சகியாமல், தான் உடனே எழுந்துபோய்