பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O4 பூர்ணசந்திரோதயம்-4 ஒருபெண்ணை அவர்கள் அக்கிரமமாகக் கொணர்ந்து வைத்துக் கொண்டு பலாத்காரம் செய்து சித்திரவதை செய்கிறார்களே என்ற நினைவினால் ஜெமீந்தாரினது விஷயத்தில் பெருத்த கோபமும் வீராவேசமும் தோன்றின. அங்குள்ளவர்களான ஜெமீந்தாரையும், லீலாவதியையும் மற்றவர்களையும் அடித்துத் தவிடு பொடியாக்கிவிட்டு அங்குள்ள சகலமான பொருட் களையும் அள்ளிக் கொண்டு ஷண்முகவடிவையும் தான் அபகரித்துக் கொண்டுபோய்விட வேண்டுமென்ற எண்ணம் தோன்றி அவனைத்துண்டிக்கொண்டே இருந்தது. ஆகையால், அவன் எப்போதும் தனது மடியில் ஆயத்தமாக வைத்திருக்கும் முகமூடியை எடுத்து முகத்தில் போட்டுக்கொண்டு வெளியில் வரத் தயாராக இருந்தான். ஜெமீன்தார் ஒருவேளை விளக்கைக் கொளுத்தினால் தனது அடையாளம் தெரிந்து போய்விடுமென்ற நினைவினால் அவன் அவ்வாறு முகமூடி தரித்து வெளியில் வரத் தயாராக இருந்தான். அவன் எதிர்பார்த்தபடி ஜெமீந்தார் முடிவில் விளக்குகளைப் பொருத்திவிட்டு, நாற்காலியிலிருந்த விசையை அழுத்தி அவளை விடுவித்து பலாத்காரம் செய்யப் போன சமயத்தில் கட்டுக்கடங்காத பரம விகார நிலைமையை அடைந்திருந்த கட்டாரித்தேவன் குபிரென்று பாய்ந்து கட்டிலை விட்டு அப்பால் வந்து ஷண்முகவடிவைத்துக்கி ஒரு பக்கமாகப் படுக்க வைத்துவிட்டு ஜெமீந்தார் மீது பாய்ந்து அவரைத் தூக்கி நாற்காலியில் எறிந்து விசையில் மாட்டி விட்டான் என்ற விஷயம் முன்னரே விஸ்தாரமாகக் கூறப்பட்டிருக்கிறதல்லவா!

அவ்வாறு சரியான சமயத்தில் அங்கே வந்து தோன்றித் தமது துர் எண்ணத்தில் மண்ணைப் போட்ட மனிதன் யாராக இருப்பான் என்ற பெருத்த திகிலும் கலக்கமும் கொண்ட ஜெமீந்தார் அப்படியே பிரமித்துத் திகைத்து அந்த மனிதனை உற்று நோக்கினார். அவன் ஒரு ராrசன்போல பிரம்மாண்டமான வடிவம் உடையவனாக இருக்கக்கண்ட ஜெமீந்தார் குலை நடுக்கங் கொண்டார். அவன் தனது முகம் வெளியில் தெரியாதபடி கருப்பு நிறக்குல்லா அணிந்திருந்தது,