பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பூர்ணசந்திரோதயம்-4

வெளியில் இழுத்து உயர்த்திப் பிடித்தான். திடீரென்று மின்னல் தோன்றுவதுபோல, அந்தக் கத்தி பளிச்சென்று மின்னியது. கிழவர்கலங்கிக்கலகலத்துப் போனவராய், “அப்பா நீ என்னை வெட்ட வேண்டாம். இதோ என் சட்டையின் உள் பக்கத்துப் பையில் திறவுகோல் இருக்கிறது. இதை எடுத்துக்கொண்டு போய் உனக்கு வேண்டிய பொருளை எடுத்துக்கொண்டுபோ. போகும்போது பக்கத்து அறையில் கதவு ஒரமாக ஒளிந்து கொண்டிருக்கும் என் தம்பி மகளான லீலாவதியை இங்கே அனுப்பிவிட்டுப் போ’ என்றார்.

அதைக்கேட்டகட்டாரித்தேவன், “சரி; அதுதான் விவேகிக்கு அழகு. அப்படியே செய்கிறேன். ஆனால், நான் போகும்போது இந்தப் பெண்ணையும் தூக்கிக்கொண்டு போகவேண்டும். அதற்காக மாத்திரம் நான் திரும்பி வருவேன்’ என்று கூறியவண்ணம் அவரது சட்டைக்குள்ளிருந்த திறவுகோலை எடுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு அப்பால் நடந்து வெல்வெட்டு மாடத்தை அடைந்தான்.

அதுவரையில் மயங்கிக்கிடந்த ஷண்முகவடிவு மெதுவாகத் தனது சிரத்தைத்துக்கிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். அதைக் கண்ட ஜெமீந்தார் அவசரமாகவும் தணிவான குரலிலும் பேசத் தொடங்கி, “பெண்ணே ஷண்முகவடிவூ! சீக்கிரமாக எழுந்திரு. இங்கே வந்திருக்கிறவன் பெருத்த கொள்ளைக்காரன் போலிருக்கிறது. அவன் என் இரும்புப் பெட்டியிலுள்ள பொருளை எல்லாம் எடுத்துக்கொண்டு வரப் போயிருக்கிறான். வந்து உன்னையும் எடுத்துக்கொண்டு போவதாகச் சொல்லிப் போயிருக்கிறான். நீ என் விஷயத்தில் பிடிவாதமாக நடந்து கொண்டாயானாலும் உன்னை இந்த முரட்டுத் திருடனிடம் காட்டிக் கொடுக்க எனக்கு மனமில்லை. ஆகையால், நீ ஒரு காரியம் செய். அதோ வலது கைப் பக்கத்தில் ரோஜாப் பூவைப் போல இருக்கிறதல்லவா, அதன் மேல் கையை வை. உடனே ஒரு கதவு திறந்துகொள்ளும். அதற்கப்பால் படிகள் கீழே