பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 பூர்ணசந்திரோதயம் -4 எதிர்பார்த்தபடி ஏதோ ஒரு தந்திரம் செய்து யாராகிலும் ஒருவரைக் கொணர்ந்துவிட்டுத் தன்னை அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றுவதை நினைக்க நினைக்க, அவளது மனம் கடவுளின் கருணாகடாrத்தையே சிந்திக்கத் தொடங்கியதன்றி, ‘சுவாமி ஆண்டவனே! என்னை முடிவு வரையில் காப்பாற்றி, நான் செளக்கியமாகவும் பத்திரமாகவும் ஊர்போய்ச் சேர்ந்துவிடும்படி செய்ய வேண்டுமப்பனே; இந்த துஷ்ட ஊரில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் என் அக்காளையும் எப்படியாவது திருப்பிக் கொண்டுவந்து எங்களிடம் சேர்த்துவிட வேண்டும் கிருபாநிதியே! அநாதைகளான எங்களுக்கு உன் பாதுகாப்பன்றி வேறு கதியில்லை என் ஐயனே! எங்களைப் பெற்ற தகப்பன் தாய் முதலிய எல்லோரும் நீ தானப்பா என் கருண்ை வள்ளலே! என்று தன் மனதாரக் கடவுளைப் பிரார்த்தித்தவளாய்ச் சென்றாள்.

மேன்மாடத்தில் கிழவரை நாற்காலியில் மாட்டிவிட்ட திருடன், மறுபடியும் வந்து தன்னையும் அபகரித்துக் கொண்டு போக எண்ணுவதாகச் சொல்லிவிட்டுப் போனதை, அவள் ஒருவாறு உணர்ந்தாள் ஆகையால், அவன் மேன்மாடத்தில் தன்னைத் தேடிக் காணாது விரைவாகக் கீழே இறங்கிவந்து தன்னைப்பிடித்துக் கொண்டு போய் விடுவானோ என்ற திகில் அவளது மனதில் அளவற்ற ஊக்கத்தையும், கால்களுக்கு மிகுந்த சுறுசுறுப்பையும் உண்டாக்கியது. ஆகையால், இரண்டு இறகுகள் முளைக்கப் பெற்றவள் போல, அவள் பறக்கலானாள். மருங்காபுரி ஜெமீந்தார்.அவளது விஷயத்தில் முற்றிலும் மோசக் கருத்தாக நடந்துகொண்டார் ஆனாலும், அவர் கொடிய இரும்பு நாற்காலியில் மாட்டப்பட்டிருப்பதும் திருடன் கையில் அகப்பட்டிருப்பதும் அவளது தயாள மனதை இளக்கி சஞ்சலப் படுத்தின. வேலைக்காரரை எழுப்பி, கிழவரைக் காப்பாற்றும் படி மேலே அனுப்பலாமா என்ற எண்ணம் அடிக்கடி அவளது மனதில் உதித்து அவளை வதைத்துக்