பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பூர்ணசந்திரோதயம்-4 அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர், ‘இது நிரம்பவும் முக்கியமான கடிதம். ஆதலால், இதை நான் வேறே யாரிடத்திலும் கொடுக்கக் கூடாதானாலும், உங்களிடம் கொடுக்க அவநம்பிக்கை கொள்வதாக நீங்கள் நினைக்கக் கூடாது. இதோ நான் காட்டுகிறேன். நீங்கள் இதன் எழுத்தை மறுபடியும் பார்த்துக்கொள்ளலாம். உங்களுக்கு உண்மை தெரியக்கூடுமானால், இதைப் பார்த்தவுடனே நீங்கள் இதை இன்னார் எழுதியது என்று சொல்லி விடுவீர்கள். அப்படி இல்லாவிட்டாலும், இப்போது பார்த்தால் இது ஞாபகத்தில் நின்று விடும். பிறகு இதைப் போன்ற எழுத்து உங்களுடைய கண்ணில் படுமானால், இந்த ஞாபகம் உடனே உண்டாகி விடும் ஆகையால், நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியவண்ணம் தமது கையிலிருந்த கடிதத்தை எடுத்துக்காட்ட லீலாவதி மெதுவாக அவருக்கு அருகில் சென்று, கடிதத்தின் எழுத்தை வியப்போடும் ஆவலோடும் கவனிப்பவள் போல உற்று நோக்கி, ‘இந்த எழுத்து அடிக்கடி நான் பார்த்த எழுத்தாக அல்லவா இருக்கிறது! ஆம், ஆம். இந்த எழுத்துள்ள கடிதம் அடிக்கடி என் புருஷருக்கு வந்ததுபோல ஒருவித ஞாபகம் உண்டாகிறது. இருந்தாலும், இன்னாருடைய எழுத்து என்பது தெரியவில்லை. உங்களுக்குப் பிரியமானால் நான் ஓர் உதவி செய்யத் தடை இல்லை. மாரியம்மன் கோவிலில் நாங்கள் இருந்த காலத்தில் எங்களிடம் சில வேலைக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் மூலமாகவே அவருக்குக் கடிதப் போக்குவரத்து நடந்து வந்தது. இந்தக் கடிதத்தை அவர்களிடம் காட்டினால், அவர்கள் எழுத்தைப் பார்த்தவுடனே நிஜத்தைச் சொல்லி விடுவார்கள் ஆகையால், நான் இன்றைய தினமே அவர்களை வரவழைத்து உண்மையை அறிந்து வைக்கிறேன். இந்தக் கடிதத்தை என்னிடம் கொடுத்து வையுங்கள் என்றாள்.

இன்ஸ்பெக்டர் நிரம்பவும் சந்தோஷம் அடைந்தவராய்க் காணப்பட்டு, சரி; உங்களுக்கு நாங்கள் அவ்வளவு சிரமம்