பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 227 முற்றிலும் குழம்பிய மனத்தினளாய் உயிரற்ற ஒவியம்போல முகக்களை இழந்து தளர்நடை நடந்து ஸ்டேஷனுக்குள் நுழைந்தாள். உடனே, போலீசார் அவளை அவ்விடத்திலிருந்த சிறைச்சாலை அறைக்குள் விடுத்துப் பூட்டிவிட்டு அந்தச் செய்தியைப் போலீஸ் இன்ஸ் பெக்டருக்குச் சொல்லி அனுப்பியதன்றி, இரண்டு மருத்துவச்சிகளை அழைத்து வருவதற்கும் ஒரு ஜெவானை அனுப்பினார்கள்.

அதன்பிறகு கால்நாழிகை சாவகாசத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்து, ஜவான்களின் தலைவன் சொன்ன வரலாறுகளை எல்லாம் பொறுமையாகக் கேட்டதன்றி, அங்கிருந்த குழந்தையின் சவத்தையும் நன்றாக ஆராய்ச்சி செய்து பார்த்தார். அவர் அதன்பிறகு சிறைச் சாலைக்குள் நுழைந்து அவ்விடத்திலிருந்த ஷண்முகவடிவை உற்று நோக்கினார். யெளவனமும் அழகும் வடிவெடுத்ததோ என்று சொல்லும் படி உத்தம லக்ஷணங்கள் முகத்திலேயே ஜ்வலிக்க, நாணமும் கிலேசமும் நிறைந்தவளாய்த் துயரக் கடலில் ஆழ்ந்துகிடந்த அருங்குணமணியான ஷண்முக வடிவைக் கண்டவுடனே இன்ஸ்பெக்டரது மனம் அவளது விஷயத்தில் பெரிதும் இரக்கமும் அனுதாபமும் கொண்டதன்றி, அப்படிப்பட்ட கொடிய குற்றத்தை அவள் செய்திருப்பாளா என்ற ஒருவித ஐயமும் அவரது மனதில் தோன்றியது. அவளது முகத்தெளிவையும் உடம்பின் சுறுசுறுப்பையும் அவர் நன்றாக உற்று நோக்கினார். சிறிதுநேரத்திற்கு முன் பிரசவித்த ஸ்திரீயின் உடம்பில் காணப்படும் குறிகள் எதுவும் அவளிடம் காணப்பட வில்லை. முகத்தில் வெளிறு இல்லை. உடம்பில் சோர்வும் களைப் பும் தோன்றவில்லை. அவர் உடனே அவளிடம் வார்த்தையாடத் தொடங்கி, அவளது வாக்குமூலத்தைக் கேட்டறிந்துகொண்டு, அவளை அவ்விடத்தில் விட்டு அப்பால் சென்றார். அப்போது அவ்விடத்திற்கு இரண்டு மருத்துவச்சிகள் வந்து சேர்ந்தனர். அவர்கள் இருவரையும் போலீசார், சிறைச்