பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 பூர்ணசந்திரோதயம்-4 பிரிந்து வந்து நெடுங்காலமாகிறது. என்னை அழைத்து வந்த மனுவிக்கும் என்னைக் கடைசியாக பலவந்தப்படுத்திய மனிதர்களுக்கும் எங்களுடைய குடும்ப வரலாறுகளும் என் அக்காளைப் பற்றிய விவரங்களும் நன்றாகத் தெரிந்திருக் கின்றன. ஆனால் என் அக்காள் எங்கே இருக்கிறாள் என்பதை நான் தெரிந்து கொள்ளக் கூடவில்லை. அவர்கள் அவளை என்ன செய்திருக்கிறார்களோ தெரியவில்லை. சக்கா நாயக்கர் தெரு 13வது இலக்கமுள்ள வீட்டில் தான் இருப்பதாக அவள் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறாள். என்னை இப்போதும் நீங்கள் அந்த இலக்கமுள்ள வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் விட்டால், என் அக்காளைப் பற்றிய உண்மையான வரலாற்றை நான் அறிந்து கொள்ளுகிறேன். எனக்குத் துணையாக யாரையாவது ஒருவரை நீங்கள் என்னோடு அனுப்பினால், அது நிரம்பவும் உதவியாக இருக்கும்” என்றாள்.

இன்ஸ்பெக்டர், “சரி, அப்படியானால் உன்னிஷ்டப்படியே செய். உனக்குத்துணையாக நானே உன்னோடுகூட வருகிறேன். நாம் இருவரும் நேராக சக்கா நாயக்கர் தெரு 13வது இலக்க முள்ள வீட்டுக்குப் போய் அந்த வீட்டிலுள்ள மனிதரைக் கூப்பிட்டு உன் அக்காளைப் பற்றி விசாரிப்போம்; வா;

போகலாம்’ என்றார்.

அவரிடத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்த ஷண்முகவடிவு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு அவரைப் பின்தொடர்ந்து நடக்கலானாள். -

இருவரும் போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளிப்பட்டு வீதியோடு வெகுதூரம் சென்றனர். இன்ஸ்பெக்டர் அவளிடம் பற்பல கேள்விகளைக் கேட்டு அவளது குடும்ப வரலாறு களையும், அவளது அக்காளான கமலம் சோமசுந்தரம் பிள்ளையைக் காண்பதற்குத் தஞ்சைக்கு வந்ததையும், பிறகு அவளிடமிருந்து வந்த கடிதங்களின் வரலாறுகளையும், பண்டாரத்தினால் தனக்கு நேர்ந்த அவகேட்டையும், அதனால்