பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 23 f

தனக்கும் கலியாணசுந்தரத்திற்கும் நேர்ந்த நட்பையும், கலியான ஏற்பாட்டையும் பிறகு கலியாணசுந்தரம் கோலாப் பூருக்குப் போக நேர்ந்ததையும், தானும் அவ்விடத்திற்குப் போனதையும், அங்கே நிகழ்ந்த விஷயங்களையும், பிறகு தன்னை அம்மணி பாயி தஞ்சைக்கு அழைத்துவந்த விவரத்தையும், அவள் தன்னை மருங்காபுரி ஜெமீந்தார் விட்டில் கொண்டுபோய் விட்டதையும், அவர்கள் செய்த வஞ்சகத்தையும், பிறகு கட்டாரித்தேவன் தெய்வச் செயலாக வந்ததையும், அந்தச் சமயத்தில் தான் தப்பி வந்ததையும், அப்படி வந்தபோது போலீசாரால் பிடிபட்டதையும் ஷண்முக வடிவு இன்ஸ்பெக்டரிடம் சுருக்கமாக எடுத்துக் கூற, அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் அளவற்ற பிரமிப்பும் வியப்பும் அடைந்தவராய், அந்த மடமங்கையினது விஷயத்தில் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்த அனுதாபமும் இரக்கமும் பட்சமும் கொண்டவரானார். ஆனால், அவள் அம்மணிபாயி, மருங்காபுரி ஜெமீந்தார், கட்டாரித்தேவன்முதலிய பெயர்களை அறியாதவள் ஆதலால், அவர்களை யாரோ மனிதர்களென்று பொதுப்படையாகக் கூறினாள். ஆகவே, இன்ஸ் பெக்டர் அவ்வளவுதூரம் வஞ்சக மானகாரியங்களைச் செய்த மனிதர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கமலத்தின் கதி எப்படி ஆயிற்று என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் உறுதி செய்துகொண்டவராய், அவளை அழைத்துக் கொண்டு பற்பல வீதிகளையும் தெருக்களையும் கடந்து அரை நாழிகை சாவகாசத்தில் சக்கா நாயக்கர் தெரு 13வது இலக்கமுள்ள வீட்டின் வாசலை அடைந்தார்.

அப்படி அவர்கள் நடந்த காலத்தில் ஷண்முகவடிவு, தான் அதிசீக்கிரத்தில் தனது அக்காளைக் காணலாம் என்ற எண்ணத்தினாலும் அவாவினாலும் வருத்தப்பட்டவளாய் நடந்தாள். தன்னை விசை வைத்த நாற்காலியில் மாட்டிவிட்ட மனிதரது மாளிகைதான் சக்கா நாயக்கர் வீதியிலுள்ள 13வது