பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 235 மாளிகை தென்பட்டது. அதைக் கண்டவுடனே ஷண்முகவடிவு அதை நன்றாக உற்றுநோக்கி, ‘இதுதான் அந்த மாளிகை” என்றாள்.

இன்ஸ்பெக்டர் மிகுந்த வியப்பும் ஒருவித மகிழ்ச்சியும் அடைந்தவராய், ‘இதுதானா? நன்றாகக் கவனித்துப் பார்த்துச் சொல்’ என்றார். -

ஷண்முகவடிவு மறுபடியும் அதைக் கூர்ந்து ஆராய்ச்சி செய்தபின், ‘ஆம், இதுதான். நிச்சயம், சந்தேகமில்லை’ என்றாள்.

இன்ஸ்பெக்டர், ‘'சரி; அப்படியானால், நாம் இனி சக்கா நாயக்கர் தெருவுக்குப் போகலாம். இந்த மாளிகை இன்னாரு டையது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்; அதைப்பற்றி நாம் யாரையும் விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த மாளிகை மருங்காபுரி ஜெமீன்தாருக்குச் சொந்தமானது. அவர் நிரம்பவும் வயசான கிழவர். அவருக்குத்தான் இப்படிப்பட்ட துர் விஷயங்களில் அதிகப் பிரியம். இந்த மாளிகையில் ரதிகேளி விலாசமென்று ஒரு சயனக் கிரகம் இருப்பதாகவும், அவ் விடத்தில் விசைவைத்த நாற்காலிகளும், விகாரமான படங்களும், மற்றும் பற்பல ஆட்சேபகரமான பொருட்களும் இருப்பதாக நான் பல தடவைகளில் கேள்வியுற்றிருக்கிறேன். உன் விஷயத்தில் அவர்செய்ததாக நீ சொன்னதெல்லாம் நிஜமாக இருக்கும். அதைப்பற்றி இனி நான்சந்தேகப்பட்வே மாட்டேன். இந்த மனிதர் எப்படிப்பட்ட அக்கிரமமானாலும் செய்யக்கூடிய கொடிய பாவி நீ சொன்ன வரலாறுகளையும் பார்த்தால், அவர் இன்னமும் நாற்காலியில் மாட்டிக்கொண்டேதான் இருப்பாரென்று நினைக்கிறேன். அநேகமாய் அந்தத் திருடன் கூட இன்னமும் இந்த மாளிகைக்குள்ளே தான் இருப்பான் என்றும் நினைக்கிறேன். நான் இப்போது உள்ளேபோய் இந்தத் துஷ்டக்கிழவனுக்கு உதவிசெய்ய எனக்கு இஷ்டமில்லை. தான் செய்த கொடுமைகளுக்கு அவன் தெய்வ சங்கல்பமாக